கிறிஸ்துமஸ் பாட்டு

 கிறிஸ்துமஸ் பாட்டு


விண்ணின் மைந்தன்
மண்ணில் அவதரித்தார்
கானிடையரோடு நாமும்
மாடடைக் குடில் தன்னில்
மகிபனைக் கண்டிடுவோம்...வாருங்கள்

           ஆஹா...ஹா...ஹா ...ஹா
         .  என்ன ஆனந்தம்
           ஆநிரை கொட்டிலில் 
           ஆவின் தாலாட்டலில்....( 2)
            ஆஹா...ஹா...ஹா ஹா
            என்ன  ஆனந்தம்!
                   


வானதூதர் வாழ்த்திட
வான்வெள்ளி வழி காட்டிட
வானசாஸ்திரிகளோடு நாமும்
பண்ணிசைத்து  மகிழ்வோடு
பாலனைப் பணிந்திடுவோம் ... வாருங்கள் 

        ஆஹா...ஹா...ஹா...ஹா
          என்ன ஆனந்தம்!
         ஆநிரை கொட்டிலில்
          ஆவின் தாலாட்டலில்..(..2)
          ஆஹா....ஹா....ஹா..ஹா
          என்ன ஆனந்தம்!

            
வேதம் நிறைவேறிட
வேற்றுமை அகன்றோடிட
வெறுங்கந்தை ஆடை அணி
வேந்தன் வந்துதித்திட்டார்
விரைந்து வந்து வாழ்த்திடுவோம்..... வாருங்கள்


   ஆஹா...ஹா....ஹா...ஹா
   என்ன ஆனந்தம்!
    ஆநிரைக் கொட்டிலில்
     ஆவின் தாலாட்டலில்..(..2)
    ஆஹா...ஹா...ஹா...ஹா..
     என்ன ஆனந்தம்!

                         
         

Comments

Popular Posts