செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்....
"செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு
குறள் : 1097
செறாஅ - வெகுவாக
சிறு சொல்- கடுஞ்சொல்
பெற்றார் போல்- பகைவர் போல
நோக்கும் - பார்க்கும்
உறாஅர் -அறிமுகமில்லாதவர்
போன்று- போல
உற்றார்- நண்பர்
குறிப்பு- அடையாளம்
பகை உணர்வில்லாக் கடுமொழியும்
பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும்
வெளியில் அயலார் போல இருந்துகொண்டு
அகத்தே அன்பு கொண்டவரின்
அடையாளமாகும்.
விளக்கம்:
பேச்சில் பகைமை இருக்காது.
ஆனால் பார்வையில் கடுமை இருக்கும்.
அதாவது பகைவரைப் பார்ப்பது போல
பார்வை இருக்கும்.
பார்வை மட்டும்தான் இப்படியா?
பேச்சும் கடுமையாக இருக்கும்.
ஆனால் அது உள்ளத்தில் இருந்து
வருவதாக இருக்காது.
அகத்தில் இனிமையும் புறத்தே
இன்னாததுமாக
பேச்சு இருக்கும்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
பேசும் பண்பு இருக்கும்.
இதுதான் களவில் காதலை
வளர்த்துக் கொள்பவர்கள் நடந்து
கொள்ளும் முறை.
அன்புறாதவர்போல அன்புற்றிருப்பது
பார்வைக்கு தொடர்பில்லாதவர்போல
தொடர்பில் இருப்பது .
இவை காதலர் குறிப்பால் உணர்த்தும்
அடையாளங்கள்.
இது அவர்கள் தங்கள் காதலை உலகு
அறியாமலிருப்பதற்காக நிகழ்த்தப்படும்
ஒருவிதமான நாடகம் என்றே
சொல்ல வேண்டும்.
"உறாஅர் போன்று உற்றார்"
என்று எவ்வளவு நயமாகச்
சொற்களைக் கையாண்டுள்ளார்
வள்ளுவர்.
"அறிமுகமில்லாதரைப் பார்ப்பது
போன்ற பார்வை.
அன்பில்லாவதவர் போன்ற
மாறுபாடான பேச்சு இவை
களவில் தங்கள் காதலை
கொள்கிறவர்கள்
நடந்துகொள்ளும்முறை " என்கிறார்
வள்ளுவர்.
English couplet:
The slighting words that anger foign,while eyes their
love reaveal
Are signs of those that love, but would their love conceal"
Explanation:
Little words that are harsh and looks that are hateful
are the expressions of lovers who wish to act
like stranger.
Transliteration:
Seraaach chirusollum setraarpol nokkum
Uraaarpondru utraar kurippu "
Comments
Post a Comment