தீயவை செய்தார் கெடுதல்....

தீயவை செய்தார் கெடுதல்....


"தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று "

                          குறள் :208


தீயவை - தீமை பயக்கும் செயல்கள்
செய்தார் - செய்பவர்
கெடுதல் - அழிந்து போதல்
நிழல் -நிழலானது
தன்னை- தன்னையே
வீயாது - நீங்காமல்
அடி - பாதம்
உறைந்தற்று - தங்கினாற் போன்றது


பிறர்க்குத் தீமை செய்பவர் அழிந்து
போதல் என்பது ஒருவனுடைய நிழல்
அவனை விட்டு நீங்காமல் அவன் பாதத்திலேயே
 தங்கினாற் போன்றதாகும்.

விளக்கம்:

தீமை செய்தவனுக்குத் தீமை
கிடைக்கும்.
நாம் செய்த தீமை நம்மோடுதான்
வரும்.
அது தெரியாமல்தான்  நாம்
பிறர்க்குத் தீமை செய்து 
கொண்டிருக்கிறோம்.
நிழல் எப்போதும் நம் கூடவே தான்
வரும்.
சில நேரங்களில் நிழல் காணாமல்
போகலாம்.
அதற்காக நிழல் இல்லை 
என்று நினைத்துவிட
வேண்டாம்.
நிழல் எங்கேயும் போகவில்லை.
நம் காலடியில்தான் இருக்கும்.
அதுபோல பிறர்க்குச் செய்யும்
 தீமையானது
நிழல் போல நம் கூடவே
வந்து கொண்டிருக்கும்.
நிழல் காணாமல் போவதுபோல
சில நேரங்களில் தீமை 
கண்ணுக்குப் புலப்படாமல்
இருக்கலாம்.அதற்காக இல்லை
 என்று ஆகிவிடாது.

எந்த நேரத்திலும் நாம் ஒருவர்க்குச்
செய்த தீமை நம்மை வந்துச் சேராது
என்று நினைத்துவிட வேண்டாம்.
நாம் செய்த தீமை உன்னை
நிழல் போல
தொடரும். ஆதலால் நமக்குக்
 கேடு வரக்கூடாது
என்று நினைப்போமானால் மறந்தும்
பிறர்க்குத் தீமை செய்யாது இருத்தல் 
வேண்டும்.
நீ பிறர்க்குச் செய்யும் 
தீமையானது நிழல்
போல உன்னையே தொடரும்
என்கிறார் வள்ளுவர்.


English couplet:

"Man's shadow dogs his steps where'er he wends;
Destruction thus on sinful deeds attends "


Explanation:

Destruction will dwell at the heels of those who
commit evil even as their shadow that
leaves them not.

Transliteration:

"Theeyavai seydhar ketudhal nizhaldhannai
Veeyaadhu atiurain thatru"

Comments

Popular Posts