எழுதப்படாத இரண்டாம் அத்தியாயம்
எழுதப்படாத இரண்டாம் அத்தியாயம்
தடை அதை உடை
முதல் அத்தியாயத்தில் பல தடைகள் வந்திருக்கலாம். நமதுகுடும்பச் சுழல் நம் கனவுகளுக்குத் தடையாக இருந்திருக்கலாம். மற்றவர்களின் வெற்றியைக் கண்டு, நமது வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று மனம் நொடிந்து சோர்ந்து போன நாட்கள் வந்திருக்கலாம்.ஆனால், நினைவில் கொள்ளுங்கள்!மலர வேண்டிய நேரத்தில் மலராத ஒரு மொட்டு, மலரவே முடியாத மொட்டு அல்ல. அதற்குரிய காலமும் சூழலும் அமையும்போது அது மலரக்கூடும். ஒவ்வொருவருக்கும் ஒரே காலத்தில் ஒரே மாதிரியான வாய்ப்புகள் அமைவதில்லை.
ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உரிய காலம் ஒன்று வராமல் போகாது.மனந்தளாரமல் அடுத்த அத்தியாயத்தை எழுதத் தொடங்கவேண்டும்
அனுபவங்கள் அழகாக்கட்டும்
இரண்டாம் அத்தியாயம் அனுபவங்களை அழகாக்கித் தரும் பொருள் பொதிந்ததாக அமைந்திடட்டும்..கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறுகள் உங்கள் அனுபவங்கள்; அவை உங்கள் அடையாளமாகிவிடாது நீங்கள் இழந்த வாய்ப்புகள் உங்கள் கடந்த காலத்தின் ஒரு பகுதி. அதுவே உங்கள் எதிர்காலத்தின் எல்லையாகிவிடாது.நேற்று நீங்கள் எடுத்த முடிவு தவறாக இருந்திருக்கலாம். இன்று அதைத் திருத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.நேற்று உங்களிடம் திறமை இருந்தும் அதை வெளிப்படுத்த சரியான சூழல் அமையாமல் போயிருக்கலாம். நேற்று உங்களை யாரும் பாராட்டாமல் உங்களை அவமானப்படுத்தியிருக்கலாம். இன்று உங்கள் உழைப்பால் அவை எல்லாவற்றிலிருமிருந்து மீண்டு வந்து உங்களுக்கான சிறந்த இடத்தை நீங்கள் உருவாக்கிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.கதவுகள் திறந்திருக்கின்றன:
அடுத்த அத்தியாயத்திற்கான கதவு வரவேற்று திறந்தே இருக்கிறது.உங்கள் நேற்றைய நிலை எதுவாக இருந்தாலும், உங்கள் இன்றைய முயற்சி நாளைய நிலையை மாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தரும்.வாழ்க்கையில் சில கதவுகள் மூடப்படுகின்றன. அவற்றின் முன்னால் நின்று அழுதுகொண்டிருப்பதால் அவை திறந்துவிடப் போவதில்லை. மூடப்பட்ட கதவுகளைப் பற்றிய வருத்தத்திலிருந்து விடுபட்டு, திறந்திருக்கும் புதிய பாதைகளைத் தேடத் தொடங்க நல்ல தருணம் வாய்த்திருக்கிறது என்ற நம்பிக்கையோடு அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம்.
கடமையைச் செய்:
முதல் அத்தியாயத்தில் விடுபட்ட
செய்யத்நவறிய கடமைகளை முழுதாய் செய்யும் முனைப்போடு அடுத்த அத்தியாயத்திற்குள் காலடி வைப்போம்.உங்கள் நேற்றைய நிலை எதுவாக இருந்தாலும், உங்களின் இன்றைய முயற்சி நாளைய நிலையை மாற்றுவதற்கான அடித்தளமாக அமையட்டும்..நேற்றைய தோல்வியை நினைத்து நாளைய வாய்ப்பை இழந்துவிடக்கூடாது.. நாளை எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணி இன்று செய்ய வேண்டிய கடமையை ஒத்திப்போடக்கூடாது.தொடங்குவதற்குச் சரியான தருணத்தைத் தேடிக்கொண்டே இருந்தால், தொடங்க வேண்டிய தருணம் கடந்து போய்விடும்.
உங்களிடம் இருக்கும் சிறிய திறமையைக் கொண்டு அடுத்த அத்தியாயத்தை இன்றே எழுதத் தொடங்குங்கள்.
பெரிய மாற்றங்கள் எல்லாம் சிறிய தொடக்கங்களிலிருந்தே பிறக்கின்றன.
இரண்டாவது அத்தியாயம் வெற்றியினை அள்ளித் தர காத்திருக்கிறது என்று நம்புங்கள்.. அடுத்த அத்தியாயத்தில் உங்கள் திறமையை உலகம் அறியப்போகிறது
முடிவுரை:
"எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை நிற்காதே" - சுவாமி விவேகானந்தர்*
உங்கள் கதை இன்னும் முடிந்துவிடவில்லை.
உங்கள் கனவுகள் இன்னும் காலாவதியாகவில்லை.
உங்கள் திறமைகள் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை.
உங்கள் வாழ்க்கையின் இரண்டாம் அத்தியாயம் இன்னும் எழுதப்படவில்லை!
அந்த அத்தியாயத்தை அழகாக எழுதுவதற்கான பேனா இப்போது உங்கள் கையில்தான் இருக்கிறது;
வாழ்க்கையின் சிறந்த அத்தியாயம் எப்போதும் முதல் அத்தியாயமாக இருக்க வேண்டியதில்லை;
*வாழ்க்கையின் மிகச் சிறந்த அத்தியாயம் இன்னும் எழுதப்படவில்லை, அதற்கு பெயர் தான் - நாளை!
கருத்துகள்
கருத்துரையிடுக