அளவளா வில்லாதான் வாழ்க்கை...

அளவளா வில்லாதான் வாழ்க்கை.....



"அளவளா வில்லாதான் வாழ்க்கை  குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று "
                                     குறள் :  523

அளவு   - நலம் விசாரித்து
அளாவு -நெஞ்சு கலத்தல்
இல்லாதான் - இல்லாதவனது
வாழ்க்கை - வாழ்வானது
குள - குளத்தினது
வளா - பரப்பு
கோடின்றி - கரை இல்லாமல்
நீர்நிறைந்து - நீர் நிறைந்திருத்தல்
அன்று - போன்றது , அத்தகையது


சுற்றத்தாரோடு நலம் விசாரித்து 
மனம் கலந்து மகிழ்ந்து பழகும் 
நற்பண்பு  இல்லாதவன்
வாழ்க்கை கரையில்லாத குளம்
நீர் நிறைவது போன்றதாகும்

விளக்கம் :

குளம் என்றால் அதற்கு கரை உயர்ந்திருக்க
வேண்டும்.அப்போதுதான் நீர் குளத்தில்
நிறைந்திருக்கும். அந்த நீரால் பயன் உண்டு.
கரை இல்லாத குளத்தில் எவ்வளவு நீரைப்
பெருக்கினாலும் நீர் முழுவதும் வழிந்தோடி
குளம் காய்ந்து போய்விடும்.
நீர் இருக்கும்போதுதான் குளத்திற்கு மதிப்பு.
அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கும் செழிப்பு.

அது போன்றதுதான் மனித வாழ்வும்.

ஒருவன் சுற்றம் தழுவி வாழும்போதுதான்
அவன் வாழ்க்கையில் இனிமை இருக்கும்.
உறவினரின் நலம் விசாரித்து அவர்களோடு
மனம்விட்டுப் பேசிப் பழக வேண்டும்.
அப்போதுதான் நாமும் நன்றாக
இருப்போம். நம்மைச் சுற்றி உள்ளவர்களும்
நன்றாக இருப்பார்கள்.

உறவினர்களைக் கண்டாலே சிலருக்கு
மனம் சுருங்கிப் போகும்.
ஏதாவது கேட்டுவிடுவார்களோ என்று
ஒதுங்க ஆரம்பிப்பர். பட்டும் படாமலும்
எட்ட நின்று கொள்வர். இவர்களால் யாருக்கும்
பயனில்லை. ஏன் இவர்களுக்காவது
பயன் உண்டா என்றால் அதுவும்
இல்லை என்கிறார் வள்ளுவர்.
உறவுகளோடு மனம்விட்டுப் பேசுங்கப்பா...
அல்லது வரப்பில்லாக் குளம் போல 
வறண்டு போவீங்க என்று எச்சரிக்கிறார்
வள்ளுவர்.

English couplet :

"His joy of life who mingles not with kinsmen
gathered round,is lake
where streams pour in , with no encircling bound"

Explanation:

The wealth of one who  does not mingle freely
with his relatives will be like the filling of water in a
spacious tank that has no banks.

Transliteration :

"Alavalaa villaadhaan vaazhkkai kulavalaak
Kotindri neerirain thatru"


Comments

  1. Very meaningful kural. The writer of this article wisely selected and shared her ideas clearly. Man is a social animal. He can't stay alone. He should love his family and friends and relatives and do good to them by sharing with them. That gives joy not only himself but also with people around him. Very good thought she shared. Good job.

    ReplyDelete

Post a Comment