சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்

 "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது"



                    குறள் : 647


சொலல் - சொல்வதற்கு

வல்லன் - ஆற்றல்

சோர்விலன் - மனச்சோர்வில்லாதவன்

அஞ்சான் - அஞ்சாதவன்

அவனை -இத்தகைய பண்புகள் கொண்டவனை

இகல் - போர், பகை

வெல்லல் - வெற்றி கொள்ளுதல்

யார்க்கும் - எவர்க்கும்

அரிது - அரிதான செயல்


சொல்வதற்குத்  திறனும் சோர்வும் அச்சமும்

இல்லாதவன்மீது பகை கொண்டு

அவனை வெல்ல நினைப்பது எவர்க்கும்

இயலாத செயலாகும்.



விளக்கம் :


பேசும்போது என்ன பேச நினைக்கிறோமோ 

அத்தனையையும் பேசிவிடக் கூடிய

ஆற்றல் வேண்டும்.பேச்சில்

உறுதியான கருத்து இருக்க வேண்டும்.

பேச்சுக்கிடையில் சொல்லும் செய்தி

கடினமானது இதனை நாம்

எப்படிப் பேசிவிடப்போகிறோம் ?என்ற

மனச்சோர்வு

வந்துவிடக்கூடாது.

கேட்பவர் பெரிய அறிவாளியல்லவா?

இவர்கள்முன் எப்படிப் பேசுவது?

என்று திணறிவிடக் கூடாது.

இவர்கள் என் எதிரிகளல்லவா?

அவர்கள் என் பேச்சில் தவறு

கண்டுபிடித்துவிடுவார்களோ? 

என்று அச்சப்படக் கூடாது.

மொத்தத்தில் தன் பேச்சிலும் கருத்திலும் உறுதியாக

இருக்க வேண்டும்.

இத்தகையப் பண்புகள் ஒரு பேச்சாளனுக்கு வேண்டும்.


 தான் எண்ணிய கருத்தைப் 

பிறர் ஏற்றுக்கொள்ளும் விதமாகச் சொல்லி 

இடையில் ஏற்படும் தடுமாற்றங்களைத்

தவிர்த்து, சபைக்கு அஞ்சாது பேசும்

திறன் மிக்கவனை யாராலும் எளிதில்

வென்றுவிட முடியாது என்கிறார்

வள்ளுவர்.

English couplet : 


"Mighty in word , of unforgetful mind ,of fearful speech

'Tis hard for hostile power such man to overreach"

Explanation :


It is impossible for any one to conquer him by

intrique who possesses power of speech

and is neither faulty nor timid.


Transliteration :


Solalvallan sourvilan anjaan avanai 

ikalvellal yaarkkum aridhu


Comments

Popular Posts