புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்....

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்....


"புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் "
                       குறள்  : 538

புகழ்ந்தவை _  புகழ்ந்து சொல்லப்பட்டவை
போற்றி -  எண்ணி
செயல் - செய்தல்
வேண்டும் -செய்ய வேண்டும்
செய்யாது - செய்யாது விட்டால்
இகழ்ந்தார்க்கு - மறந்தவர்க்கு, இகழ்ச்சி செய்பவர்க்கு 
ஏழ்மையும் - ஏழு பிறப்பிலும்
இல் - நன்மை இல்லை


சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைச் 
செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல்
மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் 
நன்மை இல்லை.

விளக்கம் :

சான்றோர்களால் இவை நன்மை 
தரக்கூடியன. இவையிவை  
செய்யத்தக்கவை
என்று சொல்லித் தரப்பட்ட
செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.
நாளும் பெரியோர் வாயிலிருந்து
நல்லவற்றைக் கேட்கிறோம்.
கேட்டுவிட்டு காற்றோடு விட்டுவிட்டால்
அதனால் பயன் ஒன்றுமில்லை.
கேட்ட நல்லவற்றை வாழ்க்கையில்
கடைபிடிக்க வேண்டும்.

கடைபிடிக்காவிட்டால் என்ன ஆகும்
என்று ஏனோதானோவென்று
இருந்துவிடாதீர்கள்.
நல்லவற்றைச்  செய்யத் தவறினால்...
அல்லது அவற்றை இகழ்ந்து ஒதுக்கி
வைத்துவிட்டு அல்லாதவற்றைச்
செய்வோமானால்  நமக்கு இப்பிறப்பில்
மட்டுமல்ல ஏழேழு பிறவியிலும்
நன்மை கிடைக்கப் போவதே 
இல்லையாம்.

"புகழ்தரக் கூடிய செயல்களைச்
செய்யுங்கள்.
இகழ்ச்சி வந்து தாழ்ச்சியடையாமல்
பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒருமுறை செய்யத் தவறிவிட்டால்
எக்காலத்திலும் நன்மை கிடைக்கப்
போவதில்லை.
ஆதலால் செய்யும் செயல்களில்
கவனமாக இருங்கள் "என்கிறார் வள்ளுவர்.
 

English couplet : 

"Let things that merit praise thy watchful soul employ,
Who these despise attain through sevenfold births no joy"

Explanation :

Let a man observe and do these things which have been
praised by the wise if he neglects and fails to
perform them, for him there will be no happiness
throughout the seven births.

Transliteration : 

"Pukazhndhavai Potrich cheyalventum Seyyaadhu
Ikazhndhaarkku Ezhumaiyum ill "

Comments

  1. Listen to the instructions given by the good educated and experienced people and do good. Good deeds should be reflected on hearing good news. Good.

    ReplyDelete
  2. மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் என்று உலகநீதிப்பாடல்களின் வரிகள் முற்றிலும் உண்மை.இந்த குறளின் கருத்தும் அதைத்தான் வலியுறுத்துகிறது.அருமையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts