பகல் வெல்லும் கூகையைக் காக்கை....

பகல் வெல்லும் கூகையைக் காக்கை....


பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது "
                          குறள்   : 481

பகல் - பகல்பொழுது
வெல்லும் - வென்றுவிடும்
கூகையை - ஆந்தையை,கோட்டானை
காக்கை - காகம்
இகல் - மாறுபாடு, பகை
வெல்லும் -வெற்றி கொள்ளக் கருதும்
வேந்தர்க்கு - மன்னருக்கு
வேண்டும் - இன்றியமையாத
பொழுது- நேரம் , காலம்


காக்கையானது தன்னைவிட வலிமையான
ஆந்தையைப் பகலில் வென்றுவிடும்.
அதுபோல தன் எதிரியை வீழ்த்த
எண்ணும் மன்னன் ஏற்ற
காலம் வரை காத்திருத்தல் வேண்டும்.

விளக்கம் :

ஆந்தை காகத்தைவிட வலிமை
மிக்கப் பறவை. ஆனால் ஆந்தைக்குப்
பகலில் கண்தெரியாது. அதனால்
ஆந்தையைப் பகலில் மிக எளிமையாக
காகம் வென்றுவிட முடியும்.
காகம் ஆந்தையின் பலவீனமான
அந்த நேரத்தைத்
தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி
மிக எளிதாக தோற்கடித்துவிடும்.
இரவு நேரத்தில் காகம் ஆந்தையிடம்
மோதிப் பார்த்தால் தோல்விதான்
மிஞ்சும்.

அது போன்றுதான் படை நடத்திச்
செல்லும் மன்னனும் எதிரியைப் பற்றிய
மனக்கணக்கு ஒன்று போட்டு வைத்துக்
கொள்ள வேண்டும்.
எதிரியின் பலவீனத்தைத் தனது பலமாக்கி
எங்கே? எப்படி ?எந்த இடத்தில்?
எந்தச் சூழலில்?
எதிரியை வீழ்த்த முடியும் என ஆராய்ந்து
தனக்கு உகந்த நேரம் பார்த்துப்
போருக்குச் சென்றால் வெற்றி
நிச்சயம் என்கிறார் வள்ளுவர்.

இது மன்னனுக்காக மட்டும் கூறப்பட்ட
செய்தி அல்ல.உங்கள்
பகைவரை வெல்ல வேண்டுமா?
பொறுமையாக இருங்கள்.
உங்களுக்கான காலம் வரும்போது
செயலில் இறங்குங்கள்.
எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது
ஒரு பலவீனம் இருக்கும்.
அந்தப் பலவீனத்தை உங்கள்
பலமாக்கிக் கொள்ளுங்கள்.
காலம் அறிந்து செயலில் 
இறங்கும்போது வெற்றி உறுதி
என்பது வள்ளுவர் நமக்குச்
சொல்லித் தரும் பாடம்.

English couplet :

"A crow will conquer owl in broad daylight,
the king that goes would crush,
needs fitting time to fight"

Explanation:

A crow will overcome an owl in the day time,
So the king who would conquer his enemy
must have a suitable time.

Transliteration :

"Pakalvellum kookaiyaik kaakkai ikalvellum
Vendharkku ventum pozhudhu"


Comments

  1. மிக அருமையான பதிவு.

    ReplyDelete
  2. This kural gives the secret of winning not only in wars but also in humam life. Waiting patiently for the specific time is very much appreciated. Your choice and explanation of the kural is great.

    ReplyDelete

Post a Comment

Popular Posts