பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்

மொழியின் பெருமை அது எளிதாகக்
கற்றுக்கொள்ள கூடியதாக இருக்க
வேண்டும். பண்டிதமொழி  என்று சொல்லாதபடி
பாமரரும் எளிதில் படிக்கும்
நிலை இருக்கும்போதுதான்
மொழி வளர்ச்சியடையும்.

எழுத்து அமைப்பில் ஒரு வரன்முறையும்
ஒழுங்கும் இருந்தால் பிறமொழியினரும்
எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.


கல்வி அறிவு பெற்றவர்கள் மட்டுமே படிக்கலாம்
என்ற நிலை இருந்தால் மொழி எப்படி
வளர்ச்சி அடையும்?

மொழி என்றும் இளமையோடு இருப்பதற்கு
புதிய தகவல் தொழில் நுட்பத்திற்கு
ஈடு கொடுக்கும் வகையில் அவற்றிற்கு
உகந்த தமிழ்மொழியாக்கச் சொற்கள்
பயன்பாட்டிற்கு வர வேண்டும்.

இது மொழி ஆய்வாளர்கள் அனைவரும்
ஒத்துக்கொள்ளும் கருத்து.

இதனை அனைவரும் அங்கங்கே சொல்லிச்
சென்றாலும் அதற்கான முன்னெடுப்பைக்
கையிலெடுக்கும் துணிச்சல் யாருக்கும்
வரவில்லை. இந்தக் கருத்துக்கள் யாவும்
பெரியாரின் கவனத்திற்கு வந்தபோது
அதில் இருக்கும் உண்மையைப்
புரிந்து கொண்டார் .
பெரியார்  எழுத்துச்சீர்திருத்தத்தின்
அவசியத்தை உணர்ந்தார்.


"மொழியின் சிறப்பே அதைச் சுலபமாகக் கற்றுக்
கொள்ளக்கூடியதாகவும் புதியவற்றை அறிந்துகொள்ள உதவியாகவும் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கு
அனுமதிப்பதாகவும் இருக்க வேண்டும் "என்று
தன் கருத்தை முன்னெடுத்து வைத்தார் பெரியார்.

 பன்னிரண்டு உயிர் எழுத்துகளுக்குள்
இருக்கும் ஒலி மற்றும் வடிவ வேறுபாடுகளைக்
கவனியுங்கள்.
அஆ
இ ஈ
உ ஊ 
எ  ஏ
ஐ 
ஒ  ஓ

இவற்றுள் ஐயும் ஔவும்
தனித்து நிற்பது போல
தெரிகிறதல்லவா!

அ, ஆ ,இ, ஈ , உ, ஊ ,எ , ஏ என்று
எழுதிக்கொண்டே வரும்போது
இடையில் ஐ என்று ஒலியும்
ஒழுங்கு முறையும் சற்று
பிசகுவது போல் தெரிகிறதல்லவா!
அடுத்து ஒ , ஓ என்கிறோம்
மறுபடியும் ஔ என்ற எழுத்து வந்து
ஒரு தடங்கலாக இருப்பதுபோல் உள்ளது.

எழுத்துகளுக்குள் உள்ள ஒற்றுமை
வேற்றுமைகளைப் பற்றி 
பெரியார் ஆராய்ந்தார்.

ஐ மற்றும் ஔ ஆகிய இரண்டு
எழுத்துகளோடு ஒத்துப் போகாமல்
தனித்து நிற்பது போன்ற நிலை
நெருடலாக இருப்பதாக உணர்ந்தார்.

எனவே அவர்
ஐ  என்பதை  அய் எனவும்
ஔ என்பதை அவ் 
எனவும் எழுதினால் படிப்பதற்கும்
எளிது. எழுதுவதற்கும்  எளிது
என்று நினைத்தார்.
அதனைத் தன் பத்திரிகையில் பயன்படுத்தினார்.
அதாவது ஐயா என்பது பெரியாரியச்
சிந்தனையாளர்களால் அய்யா என்று
எழுதப்பட்டது.
ஔவை என்பது அவ்வை என்று
எழுதப்பட்டது.

இதே போன்று உயிர்மெய் வருக்க
எழுத்துகள் எழுதும்போது 
 ணகர, றகர, னகர வருக்க எழுத்துகள் 
 எழுதும்போதுமட்டும்
 மற்ற வருக்க எழுத்துகள் எழுதுவது போன்ற
 ஒழுங்குமுறை இல்லாதிருந்தது.
 
 இதனால் புதிதாக மொழியைப் படிப்பவர்க்கு
 சிரமம் ஏற்பட்டது. அச்சு வார்ப்புகளிலும்
இதற்கென தனி அச்சு வார்க்க வேண்டியிருந்தது.
இதனால் ஈ. வெ. ரா. பெரியார் அவர்கள்
இந்த எழுத்துகளை எல்லா எழுத்துகளையும்
எழுதுவது போன்ற ஒரு ஒழுங்குமுறைக்குள்
கொண்டுவர வேண்டும் என்று நினைத்தார்.

அதற்கான தனி வடிவம் தயாரிக்கப்பட்டுப்
பயன்படுத்தப்பட்டது. 

தமது பத்திரிகைகளில் அந்தப் புதிய வடிவிலான
எழுத்துகளைப் பயன்படுத்தி அச்சிட்டார்.
அவரது கருத்து காலப்போக்கில் ஏற்றுக்
கொள்ளப்பெற்றது.அரசும் பெரியாரின்
எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டு
அரசாணை வெளியிட்டது.
ஆனால் ஐ, ஔ ஆகிய
இரு எழுத்துகளுக்கும் மாற்றாக
பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட 
அய், அவ் என்ற எழுத்துகளுக்கு அரசு
அங்கீகாரம் வழங்கவில்லை.

அரசு ஆணைப்படி,

ண, ல , ள , ற , ன என்ற ஐந்து எழுத்துகளும்
ஆ , ஐ , ஒ , ஓ  என்னும் நான்கு எழுத்துகளுடன்
இணைந்து வரும் எழுத்துகளான...

ணா
ணை
ணொ 
ணோ

லை
ளை

றா
றொ
றோ

னா
 னை 
 னொ 
 னோ
 
என்னும் பதின்மூன்று எழுத்துக்களின்
புதிய வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்
எனப்பட்டது.


Comments

  1. தமிழின் பெருமையை பெரியாரின் சீர்திருத்த எழுத்துகள் வாயிலாக பதிவிட்டது மிகச்சிறப்பு. தங்களின் பணித் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. The reform of Tamil letters by Respected Periyar was accepted and appreciated. It made easy to write and read the language. Because of this even the so called ordinary people can understand the language. Through this article one can note the keen interest and the knowledge towards the Tamil language of the writer. Excellent.

    ReplyDelete

Post a Comment

Popular Posts