மறந்தும் பிறன்கேடு சூழற்க....

மறந்தும் பிறன்கேடு சூழற்க....



"மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு"
                       குறள் : 204

மறந்தும் - நினைவொழிந்தும்
பிறன் - அடுத்தவனுக்கு
கேடு - தீமை, அழிவு
சூழற்க - நினையாதொழிக
சூழின் - நினைத்தால்
அறம் - அறக்கடவுள்
சூழும் - நினைக்கும்
சூழ்ந்தவன் -  எண்ணியவன்
கேடு - கெடுதி, தீமை

பிறனுக்குத் தீமை தரும் செயலை மறந்தும்
செய்யாது ஒழிவீராக. மாறாக தீமையை
மனதளவில் நினைத்தாலும் அந்தத் தீமை
ஒருநாள் நம்மிடமே திரும்பி வந்து சேரும்.

விளக்கம் :

அடுத்தவர்களுக்குத் தீமை தரும்
செயலை ஒரு போதும் செய்தல்
கூடாது. அப்படிச் செய்ய வேண்டும்
என்று நினைத்தால் அந்தக் கேடு
உங்களுக்கே திருப்பி வந்து சேரும்.
ஆதலால் மறந்தும் பிறருக்குத்
தீமை செய்ய வேண்டும் என்று
நினைத்துவிடாதீர்கள்.
நீங்கள் மற்றவர்களுக்குத் தீமை
செய்ய வேண்டும் என்று நினைத்தால்
அறக்கடவுள் உங்களுக்குத் தீமையைத்

தண்டனையாகத் தருவார். அந்தத்
தண்டனையிலிருந்து நீங்கள்
தப்பவே முடியாது.

அறம் என்பது இறைவனின் சட்டம்.
இறைவனின் சட்டத்திலிருந்து தவறு
செய்த எவரும் தப்ப முடியாது.
எண்ணத்தளவில் தீமை செய்யும்
விதையை விதைத்து விட்டால்
தீமை விளைந்தே தீரும் என்பதை
மறவாதிருங்கள்.

அறத்தைச் செய்வதற்கும் அதனைப்
புறக்கணிக்கவும் நமக்கு
உரிமை உண்டு.ஆனால் அதனால் வரும்
நன்மை தீமைகளை மாற்றும் உரிமை மட்டும்
நம் கையில் கொடுக்கப்படவில்லை.
அது அறக்கடவுள்
கையிலேயே உள்ளது.
ஆதலால் பிறனுக்குத் தீமை பயக்கும்
செயல்களை எண்ணாது ஒழிக. எண்ணினால்
எண்ணியவனை ஒறுக்கும்வகையில்
அறக்கடவுளின் செயல் இருக்கும்
என்று எச்சரிக்கிறார்  வள்ளுவர்.

English couplet :

"Though good thy soul forget , plot not the neighour's fall,
Thy plans shall virtue's power by ruin to thyself meditates"

Explanation :

Even though forgetfulness meditate not the ruin of another
Virtue will meditate the ruin of him who thus meditates.

Transliteration :

"Marandhum piranketu soozharka soozhin
Aranjoozhum soozhndhavan ketu "

Comments

  1. This kural teaches a very great truth. If you think or do any evil against any one, it will return to you. The punishment is definite. So always do good to others and think good about others. Good choice and well explained.

    ReplyDelete
  2. Mom this is well-explained and amazing👏🏽

    ReplyDelete

Post a Comment

Popular Posts