என்பி லதனை வெயில்போலக் காயுமே...

என்பி லதனை வெயில் போலக் காயுமே...


என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்"
                     குறள் : 77

என்பு -எலும்பு
இலதனை - இல்லாததை
வெயில் - கதிரவனின் வெப்பம்
காயுமே - கருக்கிவிடுவது
போல -  போன்று
அன்பு - அன்பு
இலதனை - இல்லாதவர்களை
அறம் - அறமானது

எலும்பில்லாத உயிர்களை வெயில்
வாட்டி கருக்கிவிடுவதுபோல  அன்பில்லாத
உயிர்களை அறம் வாட்டி வருத்தும்.

விளக்கம் :

அறம் என்பது எல்லாம் வல்ல ஒரு
பேராற்றல். அது தூயதாய், நடுநிலை
பிறழாததாய் நிற்கும். அதனைத்தான்
அறக் கடவுள் என்று இலக்கியங்களில்

பேசப்படுகிறது.

எல்லா சமயமும் போதிக்கும் ஒரே தர்மம்
அன்பு மட்டுமே. அன்பு மாறுபாடுகளையும்
வேறுபாடுகளையும் கடந்த ஒரு
உன்னத நிலை. அந்த அன்பு ஒருவனிடம்
இருந்தால் எந்தவித சண்டைச்
சச்சரவுகளுக்கும் இடமிருக்காது.
அன்பு ஒருவனிடம் இல்லையென்றால்...என்ன
நடக்கும்?
வள்ளுவர் கூறுகிறார் நீங்களே கேளுங்கள்.

"எலும்பில்லாத புழுக்கள் வெயிலின்
வெப்பத்தைத் தாங்க முடியாமல்
துடிதுடித்து அங்குமிங்கும் ஓடும். ஆனால்
பலனிருக்காது.  பரிதாபமாக
சுருண்டு விழும். முடிவில் மாண்டு போகும்.
அதுபோல அன்பு செய்யா உயிர்கள்
துன்பத்தை அனுபவிக்கும் கொடுமையான
காலம் வரும். அப்போது காப்பாற்றிக்
கொள்ளலாம் என்று நினைத்து
அங்குமிங்கும் ஓடி தப்பிக்க
வழி தேடலாம்.ஆனால்  எதுவும்
பலனளிக்காது. ஆதலால் காலம் வரும்
அப்போது அன்பாக நடந்துகொள்ளலாம்
என்று காத்திருக்காமல் இன்றே
பிற உயிர்களை நேசியுங்கள்.
எல்லோரிடமும் அன்பு  கொள்ளுங்கள். "
என்று அறிவுரை வழங்கியுள்ளார் வள்ளுவர்.

"அறம் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"
என்ற இளங்கோவடிகளின் சிலப்பதிகார
வரிகளும் இங்கு நோக்கத்தக்கது.

அன்பு செலுத்த தவறினால் அறம்தான்
எமனாக வந்து நிற்குமாம்.

English couplet :

"As sun's fierce ray dries up the boneless things
So loveless beings virtue's power to nothing brings"

Explanation :

Virtue will burn up the soul which is without
love even as the sun burns up the creature
which is without bone.

Transliteration :

"Enpi ladhanai veyilpolak kaayume
Anpi ladhanai Aram"


Comments

  1. This kural talks about love. God is love. Any good work without love is worthless. Love towards everyone and everything is most important virtue in the world. With love you can accomplish everything but without love you can accomplish nothing. Excellent teacher.

    ReplyDelete

Post a Comment

Popular Posts