தாவீதும் கோலியாத்தும்
தாவீதும் கோலியாத்தும்
சூழ்நிலைக்கு ஏற்ப விவேகமாக செயலாற்றத் தெரிந்தால் வெற்றி நிச்சயம். அதனால் கிடைக்கும் மேன்மையையும் புகழும்
என்றென்றும் பேசப்படும். பெருமை சேர்க்கும்.
வாய்ப்பு வரும்போது அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தெரிந்தவன் புத்திசாலி.
தனக்கு மட்டுமல்ல தன்னைச் சார்ந்தவர்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் அதிபுத்திசாலி மட்டுமல்ல சிறந்தத் தலைவனாக இருக்கக்கூடியவனாவான்.
அவனை உலகம் கொண்டாடும்.
அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில்
பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும்.
வேதாகமத்தில் இவ்வாறு விவேகமாக செயல்பட்ட ஒருவரின் வரலாறு ஒன்றுண்டு. இயேசுவுக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு பெலிஸ்தியர், இஸ்ரவேலர் மீது போர் தொடுத்து தொல்லை கொடுத்து வந்தனர். வெற்றி இருபக்கமும் மாறி மாறி இருந்தது.
எனினும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது.
மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாயினர்.
வாழ்வு மிகவும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆடு, மாடு, செல்வங்கள் திருடப்பட்டன.
அந்தவேளையில்இஸ்ரவேலரின் ராஜாவாக சவுல் என்ற மன்னன் இருந்தார்.
அவர் தன் மக்களைக் காப்பாற்ற அதிக முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை.
.இஸ்ரவேல் மக்கள் செய்வதறியாது
திகைத்தனர்.
தெய்வத்திடம் மன்றாடி நின்றனர்.
அவர்களுள் தாவீது என்னும் சிறுவனும் இருந்தான்.
அவன் ஈசாய் என்பவரது எட்டாவது மகனாவார்.
அவன் சிறுவனாக இருந்தபோதே தெய்வபக்தியுடன் வளர்க்கப்பட்டான்.
இறைவனைப் பற்றி கவிதை எழுதுவதிலும்
புலமை இருந்தது.
ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்தபடியால் கொடிய மிருகங்களிடமிருந்து போராடி தன் ஆடுகளைக் காப்பாற்றும் வீரம்
அவனிடம் இயல்பாகவே காணப்பட்டது.
போராடி ஆடுகளைக் காப்பாற்றும் சாதுரியம் இருந்ததால் எதைக் கண்டும் அஞ்சாத மன உரம் பெற்றவனாக இருந்தான்.ஆடு மேய்க்கும்போதும்
கையில் எப்போதும் கிண்ணரம்
இருக்கும் . இசைக்கருவியை மீட்டி இறைவனைத் துதித்துப் பாடிக் கொண்டே இருப்பார்.
அந்த வேளையில் மீண்டும் ஒரு தாக்குதலுக்குத் தயாரான பெலிஸ்தியர்கள் கோலியாத் என்ற அசுர பலம் கொண்ட போர் வீரனை
போருக்கு அனுப்பி வைத்தனர்.அவன் உடல் முழுவதும் இரும்பாலான கவசத்தை அணிந்து இருந்தான். அவன் ஒன்பது அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவனாக பேருருவம் கொண்ட அரக்கன் போல் இருந்தான்.
இஸ்ரவேல் மக்கள் கோலியாத்தைக் கண்டபோது அஞ்சி நடுநடுங்கிப் போயினர்.
போர் ஆரம்பமாகியது .
ஒரு குன்றின்மீது பெலிஸ்தியர்களும், இன்னொரு குன்றின்மீது இஸ்ரவேலர்களும் தாக்குதலுக்குத் தயாராக
நின்று கொண்டிருந்தனர்.
கோலியாத் பெரும் சத்தமாய்
முன்வந்து நின்றான்.
தன்னோடு தனியாகப் போரிடும் தைரியம் உங்களில் யாருக்காவது உண்டா என்று சவால் விட்டு குறுக்கும் நெடுக்குமாக
நடந்தான்.
அவனது இந்த நடையும் சிவந்த கண்களும் திடமான தோள்களும் அனைவரையும் அச்சப்பட வைத்தது.
பீதியில் அப்படியே வாயடைத்து
நின்றனர்
.அவன் இஸ்ரவேலரின் தேவனை தூஷித்தான். தாவீதின் அண்ணன்கள் போர்ப்படையில் பொறுப்பில் இருந்தனர். தாவீது தன் அண்ணன்களைப் பார்க்க போர்முனைக்கு வந்திருந்தான். அப்பொழுது கோலியாத் முன்புபோலவே முழக்கமிட்டான். அதைக் கண்ட சிறுவனாகிய தாவீதுக்கு கோபம் ஏற்பட்டது.
கோலியாத்துடன் தான் போரிட முன்
வருவதாக அறிவித்தார்.
அனைவரும் வாயடைத்துப் போயினர். போர்க் கவசம் எதுவும் இல்லை.
உருவமோ கோலியாத் தின் அரையளவுக்குக்கூட இல்லை.
இவன் எப்படி கோலியாத்தோடு போரிடும் போகிறான்?
ஏதோ விளையாட்டுப் பிள்ளை அறியாமல் சொல்கிறான் என்று நினைத்தனர்.
ஆனால் தாவீது தன் முடிவில்
உறுதியாக இருந்தான்.
பாதுகாப்புக் கவசம் எதுவும்
அணியவில்லை .
கவணையும் கூழாங்கற்களையும் எடுத்துச் கொண்டு கோலியாத்தோடு போரிட
அவன் முன் போய் நின்றான்.
தன்னோடு போரிட ஒரு சிறுவன் வந்து நின்றதும் கோலியாத்
அவனை ஏற இறங்க பார்த்தான்.
இவனா...
இந்தச் சிறுவனா என்னோடு போரிட வந்திருப்பது?
இஸ்ரவேலில் தைரியமான ஆண்கள் யாருமில்லையா என்று நக்கலாகக்
கேட்டான்.
ஏன் உன்னை அடிப்பதற்கு வேறு ஆட்கள் வேண்டுமா?
நான் மட்டும் போதும் என்றபடி சமயோஜிதமாக ஒரு கூழாங்கல்லை கவணில் வைத்து வேகமாகச் சுழற்றி கோலியாத்தின் நெற்றியில் அடித்தான்.
கோலியாத் நிலைகுலைந்து
கீழே விழுந்தான்.
அந்தத் தருணத்தை தன் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தாவீது உடனே ஓடிப்போய் கோலியாத்தின் உறையிலிருந்து அவன் வாளையே எடுத்து கோலியாத்தின் கழுத்தை வெட்டினான்.
அதைக் கண்டு பயந்து போன பெலிஸ்தியர்கள் சிதருண்டு
திரும்பிப் பார்க்காமல் ஓடினர்.
அந்த நாள் இஸ்ரவேலரின்வெற்றியின் நாளாக அமைந்தது.
அதன் பின்னர் பெலிஸ்தியரால் தங்களுக்கு எந்தவித தொல்லையும் ஏற்படாது என்ற
நம்பிக்கை ஏற்பட்டது .
.மக்கள் தாவீதை தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்தனர் .
இஸ்ரவேல் எங்கும் வெற்றி களிப்பு
நிறைந்தது. இதன்மூலம் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு பெரும் வெற்றியையும், அமைதியையும் தந்தார்.
தாவீது ஒரு ராஜாவாக உருவாக இது காரணமாயிற்று.
இந்த நிகழ்வு தாவீதின் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டது.
சூழ்நிலையைப் சாதகமாகப் பயன்படுத்தத்
தெரிந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதற்கு
தாவீதின் வாழ்க்கை ஒரு பாடமாக அமைந்தது.
நம் வாழ்விலும் கர்த்தர் கொடுக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி
முன்னேற கற்றுக் கொள்வோம்.
எந்தச் சூழலிலும் இறைவனைப் போற்றிப்
பாடுவதைக் கைவிடாதிருப்போம்.
இறைவனின் பலத்தக் கரங்களில் அடங்கி இருப்போம். அவர் நம்மை உயர்த்துவார்.
ஆமென்.
Comments
Post a Comment