திருமண வாழ்த்து
திருமண வாழ்த்து
விழுதென உறவுகள்
உடனிருக்க
நன்றென இறைவன்
நினைத்திருக்க
மணமகன் ஜெபன்
கரம் பிடிக்க
மணமகள் மெர்லின்
உடன் நடக்க
சிறுபுள்ளாய் இணையர்
சிறகடிக்க
ஆல் போல் வாழ்வு
தழைத்திருக்க
அருகு போல் பரம்பரை
நிலைத்திருக்க
மூங்கில்போல் சுற்றம்
தழுவி நிற்க
இறைவன் அருள்
இல்லம் நிறைந்திருக்க
வாழ்வீர் என்றும்
நலமாக
வாழ்த்துகிறோம் மனம்
நிறைவாக
வாழ்க பல்லாண்டு
மகிழ்வாக!
- செல்வபாய் ஜெயராஜ்
Comments
Post a Comment