உழைப்பாளர் தினம்

                          உழைப்பாளர் தினம்
       

   உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
     "  பத்து விரல்களும் பதறாது உழைத்தால்
       அஞ்சு விரலால் அஞ்சாது உண்ணலாம் "என்பார்கள்.
       ஆனால் உண்மையில் அதுதான் நிலைமையா?
       நாள் முழுவதும்  கூன் ஒடிய உழைத்தாலும் கூலி என்னவோ அரை வயிற்றுக் கஞ்சிக்குத்தான்.
       இப்படி உழைப்பாளி வர்க்கம் நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தது.
       உழைத்து உழைத்து  நைந்துபோன கைகளையும் ஆரம் சூட்டி அழகு பார்க்கும் நாள்தான் இந்த உழைப்பாளர் தினமான மே தினம்.
       இதன் வரலாற்றை  சற்று திரும்பிப் பார்ப்போம்.
           18ஆம் நூற்றாண்டின் இறுதியில்  வளர்ந்த நாடுகளில் தொழிலாளர்கள் 12 மணி முதல் 18 மணி நேரம் வரை கட்டாயமாக வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
           இதனால் தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
         நாள் முழுவதும் வேலை .சம்பளம் என்னவோ போதுமானதாக   வழங்கப்படவில்லை.
           இதனால் ஆறு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து இங்கி்லாந்தில் 'சாசன இயக்கம் 'என்ற அமைப்பு  முதன்முதலாக போராட்டங்களை முன்னெடுத்தது.
           அது படிப்படியாக அனைத்து நாடுகளிலும் பரவியது.
           இந்தப் போராட்டம்தான் பின்னாளில்  ரஷ்ய புரட்சிக்கும் வித்திட்டதாக கூறப்படுகிறது.
           அமெரிக்கா போன்ற பல நாடுகளில் எட்டுமணி நேர வேலைக்கான போராட்டம்  மேலும் தீவிரமடைந்தது.
           அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் 8 மணிநேர வேலை என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டது. இதனால் பல இடங்களில் புரட்சி வெடித்தது.
           துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்றன.
           முன்னணித் தலைவர்கள்  பலர் கைது செய்யப்பட்டனர்.
            தொழிலாளர் தலைவர்கள் எட்டு பேர்  தூக்கிலிடப்பட்டனர்.
         இது தொழிலாளர்கள் இடையே பெரும் அதிருப்தியை  ஏற்படுத்தியது. 
         அதன்பின்னர் 1889 ஜூலை சர்வதேச தொழிலாளர் மாநாடு கூடியது .
 இதில் உலக நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    இக்கூட்டத்தில் காரல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரம் வேலை் என்ற கொள்கையை கையில் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
           அமெரிக்காவில் தொடங்கிய இது பாரிசி்ல் 1890இல் முழு வடிவம் பெற்றது.
           1890 மே ஒன்றாம்நாள் சர்வதேச அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
      அதன் பின்னர்     அரசு  மே முதல் நாளை
           தொழிலாளர் நாளாக ஏற்றுக் கொண்டது.
           உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்.
           அது தான் மே தின முழக்கமாக  உள்ளது.
       
     தமிழகத்தில் தோழர் சிங்காரவேலர் தலைமையில் சென்னையில்
     முதன்முதலாக தொழிலாளர்தின உறுதி எடுக்கப்பட்டது.
            மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் பெருமைப்படுத்தும் விதத்திலும்  அன்றைய முதல்வர் காமராசர்  உத்தரவின் பேரில் 1959ஆம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில்  உழைப்பாளர் சிலை எழுப்பப்பட்டுள்ளது.
   
           விரல்களை ரணமாக்கி
           வியர்வையை உரமாக்கி
           தோள்களில் பாரம் தூக்கி
           கூலிக்காய் உடல் குறுக்கி
           உழைப்பை ஊருக்காக்கி 
           உழைக்கும் வர்க்கத்திற்கு 
           உரிய அங்கீகாரம் தரும் ஒரு நாள்
           அதுதான் உழைப்பாளர் திருநாள்!

Comments

Popular Posts