மகாராஷ்டிரா தினம் 2020

                            காராஷ்டிரா தினம்

மகாராஷ்டிரம் இந்தியாவின் மேற்கு பகுதியில் 
அமைந்துள்ள ஒரு  அருமையான மாநிலம்.
 மகாராஷ்டிரம் என்றதும் அனைவர் 
கவனத்தையும் ஈர்ப்பது அதன் தலைநகரான மும்பை என்றால் மிகையாகாது.
இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம்
வாய்ந்த நகரங்களுள் முதன்மையானது
மும்பை.
  வந்தோருக்கெல்லாம் வாழ்வளிக்கும் 
தொழில் வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
படித்தவர்களுக்கு மட்டுமல்ல படிக்காத
பாமர மக்களுக்கும் ஏராளமாக வேலைகள்
தரும் சிறப்பு மகாராஷ்டிரத்திற்கு
உண்டு.
வந்தோரைப் பசியாற வைத்து
பார்க்கும் பண்பு மும்பையின் சிறப்பு.
மொழியறியா மக்களும்  பசியாற்றிக் 
கொள்ள தொழில்கள் ஏராளம் 
இங்கே கொட்டிக் கிடக்கின்றன.

 1960ஆம் ஆண்டுக்கு முன் இது 
பம்பாய் மாகாணமாகவே இருந்து வந்தது. 

 மாநில மறு சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி மொழிவாரியாக மாநிலங்கள்
 பிரிக்கப்பட்டபோது மராட்டி மற்றும் கொங்கணி பெரும்பான்மையாகப்  பேசும் மக்கள்
 உள்ள  பகுதிகள் மகாராஷ்டிரம் என்றும் 
குஜராத்தி மொழி  பெரும்பான்மையாகப் பேசும் மக்கள் உள்ள  பகுதி குஜராத் என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டது.

1960ஆம் ஆண்டு மே ஒன்றாம் நாள் முதல் 
இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தது. 
 அன்று முதல்    மே முதல்நாளை 
மகாராஷ்டிரா தினமாகக்  கொண்டாடி வருகிறோம். 

 மகாராஷ்டிரம்  மும்பை மற்றும் நாக்பூர் 
என்று இரட்டைத் தலைநகரங்களைத்
 தலைமையகங்களாகக் கொண்டு 
செயல்பட்டு வருகிறது.

 பரப்பளவில் இந்தியாவின் மூன்றாவது 
பெரிய மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. 

 மராத்தி மொழி பெரும்பான்மையாகக் கொண்ட 
மும்பை ,தக்காணம் மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதுதான் 
மகாராஷ்டிர மாநிலம்.

 நிர்வாக வசதிக்காக 
 அமராவதி,கொங்கண்,அவுரங்கபாத்,
நாக்பூர்,புனே ,மும்பை மற்றும் நாசிக் என ஏழு மண்டலங்களாக இது பிரிக்கப்பட்டுள்ளது.

 88 விழுக்காடு மக்கள் படிப்பறிவு உள்ளவர்கள்.
 குஜராத்தி ,பார்சி ,கன்னடம், இந்தி ,உருது பேசும் மக்கள்  மட்டுமல்லாது நாட்டின் அனைத்து மொழி பேசுவோரின் கூட்டுக் கலவையாகத்தான்  மும்பை 
போன்ற பெருநகரங்கள் திகழ்கின்றன.

பேசும் இந்திகூட மணிபிரவாள நடை
 போன்று பன்மொழி கலவையாக பல
 இடங்களில் பேசுவதை நாம் 
கண்கூடாகக் காணலாம்.

 மேற்கில் அரபிக் கடலும் 
வடமேற்கில் குஜராத் மற்றும் ஒன்றியப்
 பகுதிகளான தாத்ரா நாகர் ஹவேலியும் 
வடகிழக்கில் மத்திய பிரதேசமும் 
தெற்கில் கர்நாடகமும் தென்கிழக்கில் தெலுங்கானாவும் தென்மேற்கில் கோவாவும்
மகாராஷ்டிராவின் எல்லைகளாக அமைந்துள்ளன.

மக்கள் தொகையில் இந்தியாவின் 
இரண்டாவது பெரிய மாநிலம்
 மகாராஷ்டிரம் ஆகும்.

மொத்த மாவட்டங்கள் எண்ணிக்கை
 முப்பத்து ஆறு ஆகும்.
 
இங்கு பெரும்பான்மையான மக்கள் 
 மராத்தி பேசுவதால் மராத்தி 
ஆட்சி மொழியாக உள்ளது.

பிற மாநிலத்தவரையும் அரவணைத்து தொழில் முனைவோராக அலங்கரித்துப் பார்த்த 
பெருமை மராட்டிய மண்ணுக்கு உண்டு.

ஏராளமான பிற மாநிலத்தவருக்கு 
வேலை கொடுத்தது
மட்டுமல்லாமல் உயர்பதவி நாற்காலியில் 
அமர வைத்து அழகு பார்த்த பெருமையும்
மகாராஷ்டிரத்திற்கு உண்டு.

" உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"

 தாய்த் தமிழகத்தைப் போலவே நம் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய மாநிலம் மகாராஷ்டிரம்.

அஞ்ஞானம் போக்கி
மெஞ்ஞானம் பெற்றிட
அருளாளர் பலர் தோன்றிய 
அறவுரைகள் வழங்கிய புண்ணிய பூமி இது.

       அன்னம் ஊட்டி
       அரவணைக்க இருகரம் நீட்டி
       அரபிக்கடலால்  தாலாட்டு பாடி
       அணிசெய் மலைமகுடம் சூடி  
       அழகு தேவதையாய்
       அரசாட்சி செய்திடும் மராத்திய
       அன்னை வாழிய வாழியவே!
       
       
       
       
       
      

Comments

Post a Comment

Popular Posts