மைண்ட் வாய்ஸ்


1. குரங்கின் எச்சரிக்கை
                 
போகாத...போகாத...
ஊருக்குள்ள போகாத
கொரோனா நடமாட்டம்
ரொம்ப   இருக்குதாம்
புடிச்சிட்டுப் போயிரும்
எச்சரித்து குட்டியைப்
பிடித்து வைத்திருக்கிறதாம் குரங்கு!



2. செல்போன் பார்க்காதே

மருத்துவமனை முன் போராட்டம்
செல்போன் பார்த்து ஆயா
மருத்துவம் பார்த்ததால்
தாயும் சேயும் மரணமாம்
இதற்காகதான்
செல்போன் பார்க்காதே...பார்க்காதே
என்று அம்மா
தலையில் அடித்துக் கொண்டாரோ!

3. புகார் கொடுக்கும் புலி

ஊருக்குள் ஆட்களையே
காணோம் என்று
கண்டுபிடித்துத் தரும்படி
போலீஸ் ஸ்டேசனில்
புகார்  கொடுப்பதற்காக
புலி ஓடுகிறதோ?



4. பூனையின் சேட்டை

" கிட்ட வராத...கிட்ட வராத   
நான் குடிச்சிட்டுப் போனதும்  நீ வா"
நாயை  மூன்றடி தூரத்தில்
நிற்க வைத்துவிட்டு 
பாலை குடித்து
ஏப்பம் விட்டது பூனை!



5. தாய் சொல் தட்டாதே
காடெங்கும் தண்ணீர்
"கண்ட  கண்ட
தண்ணீரையும் குடிக்காதே
வைரஸ் வந்துடும்"
தாய் சொல் தட்டாமல்
தாகத்தோடு திரும்பியது
காகம்



6. தடை உத்தரவு   

 ஊஹான் மாகாணத்திற்குப் போய்
ஊசிப்போன மாமிசம் சாப்பிட்டு
ஊரில் இல்லாத  நோயை எல்லாம்
கூட்டி வருவதால்
மறு உத்தரவு வரும்வரை 
பறவைகள் பறப்பதற்கு
தடை உத்தரவு போட்டிருக்கிறார்
பறவைகளின் ராசா கழுகு!

7. காளை மாட்டின் சிரிப்பு

மாட்டிகிட்டாங்க...மாட்டிகிட்டாங்க
நமக்கு மாட்டிவுட்ட
வாய்க்கூடையை இப்போ
மாட்டிகிட்டாங்க...
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும் என்று
இதைத்தான் பெரியவுங்க சொன்னாங்களோ!


8. அச்சமில்லை...அச்சமில்லை

"அச்சமில்லை...அச்சமில்லை 
அச்சம் என்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை..அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே" 
அஞ்சாமல் ஆட்டம்
போட்டுடவேண்டியதுதான்
ஆனைக்கொரு   காலம் வந்தால்
பூனைக்கொரு காலம் வரும் என்று
சும்மாவா சொன்னாங்க !





9. அடையாள உண்ணாவிரதம்
கொரோனாவுக்கு எதிராக
காட்டு விலங்குகள் எல்லாம்
ஒருநாள் அடையாள
உண்ணாவிரதம் இருந்தன
இதைத் தவிர மனிதர்களுக்கு
வேறு  எந்த கைமாறும்
செய்ய முடியாது
பேசி உண்ணாவிரதத்தை
முடித்து வைத்தார் 
காட்டு ராசா சிங்கம்!


10. சோசியல் டிஸ்டன்ஸ்
நான் அப்பவே சொன்னேன்
சமூகவியல் பாடம்
வேண்டாம்... வேண்டாம் என்று
இப்ப புரிகிறதா...இப்ப புரிகிறதா
நான்  படிக்காமல்
எதற்காக விலக்கி வைத்தேன் என்று
சின்ன பிள்ளைகள் சொல்வதையும்
காது கொடுத்து கேளுங்கப்பா!


11. ஞாயமான கோபம்
    
எனக்கு மட்டும் இரண்டு நிமிடம்
கொரோனாவுக்கு
ஒன்பது நிமிடமா?
என்னைவிட 
எந்த விதத்தில் உசத்தி
இந்த கொரோனா?
மின்சாரம்  கண்டுபிடித்த இவருக்கு
கோபம் வருவது ஞாயம் தானுங்க!

Comments

Post a Comment

Popular Posts