இடுக்கண் வருங்கால் நகுக....


இடுக்கண் வருங்கால் நகுக....


"இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில் "

                          குறள் : 621

இடுக்கண்  -  துன்பம்
வருங்கால் -  வரும்போது
நகுக  -  சிரித்து ஒதுக்கி விடுக
அதனை - அத்துன்பத்தை
அடுத்தூர்வது _  நெருக்கிப் போராடவல்லது
அஃதொப்பது - அதைப் போல்வது
இல் _  இல்லை

துன்பம் வரும்போது கலங்காமல் சிரித்து
விடுதல் வேண்டும். அத்துன்பத்தை நெருக்கி எதிர்த்து
வெல்லும் திறன் கொண்டது அதைப் போன்றது
வேறு ஒன்றுமில்லை.

விளக்கம் :

துன்பம் வரும்போது அதை எண்ணிக் கலங்காது
மகிழ்ந்திருக்க வேண்டும்.அத்துன்பத்தை மென்மேலும்
வளரவிடாமல் தடுக்க வல்லது
அந்நகுதலைத் தவிர வேறு ஒன்றும்
இருக்க முடியாது.

துன்பம் வரும் போது சிரிக்க வேண்டுமா...
வேடிக்கையாக இல்லை. துன்பம் வரும்போது
அழுகைதான் வரும். சிரிப்பு எப்படி வரும்.
முரண்பாடான கருத்தாக உள்ளதே என்ற
எண்ணம் ஏற்படும்.

துன்பம் நேரிடும்போது அதையே நினைத்து
வருந்துவதால்  இன்னும் அதிகமாக
மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஆதலால் அட..போய்யா...இதெல்லாம் என்ன பெரிய
துன்பம் என்று எளிதாக எடுத்துக்கொண்டு
கடந்து போவோமானால்  அந்தத் துன்பத்திற்கே
நாணம் ஏற்பட்டு நம்மைவிட்டு விலகி ஓடிவிடும்.
மகிழ்ச்சி மனபாரத்தைக் குறைத்துவிடும்.

ஆதலால் துன்பம் வந்த காலத்து அதை இயல்பாக
எடுத்துக் கொண்டு சிரித்து ஒதுக்கி
விடுவீர்களாக.
அத்துன்பத்தை நெருக்கிப் போராடும்
திறன் அந்தச் சிரிப்புக்கு மட்டுமே உண்டு
என்கிறார் வள்ளுவர்.

English couplet :

" Smile with patient, hopeful heart , in troublous hour
Meet and so vanquish grief, nothing hath equal power"

Explanation :

If troubles come laugh, there is nothing like that,
to press upon and drive away sorrow .

Transliteration :

"Itukkan varungaal Nakuka Adhanai
Atuththoorvadhu Aqdhopa
thil"

Comments

Popular Posts