நெடுநீர் மறவி மடிதுயில்....
நெடுநீர் மறவி மடிதுயில்.....
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் "
குறள் : 605
நெடுநீர் _ காலம் தாழ்த்துதல்
மறவி _ மறதி
மடி _ சோம்பல்
தூக்கம் _ பெருந்தூக்கம்
நான்கும் _ நாலும்
கெடுநீரார் _ கெட்டுப்போகும் தன்மை உடையவர்
காம _ விரும்பி
கலன் _ அணி, மரக்கலன்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், பெருந்தூக்கம்
ஆகிய இந்த நான்கும் கெட்டுப்போகும்
இயல்புடையவர் விரும்பி ஏறிச் செல்லும்
மரக்கலனாகும்.
விளக்கம் :
நாளை நாளை என்று காலம் தாழ்த்திக்
கொண்டே இருத்தல் ஒரு செயலைச் செய்ய
விருப்பமின்மையைக் காட்டும்.
மறந்து போய்விடுதல் ஆர்வம் இல்லாமையால்
ஏற்படுவதாகும்.
சோம்பல் எந்த ஒரு செயலையுமே செய்ய
விடாது.
எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பவன்
ஒரு வேலையையும் செய்யமாட்டான்.
இந்த நான்கின்மீதும் ஒருவன் விருப்பம்
கொண்டவனாக இருப்பான் ஆனால்
அவன் கெட்டழிவது உறுதி.
கால தாமதப்படுத்துவதைத் தொடர்ந்து
வருவனதான் மறதி, சோம்பல் தூக்கம்
எல்லாமே.
எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.
ஒன்றை விரும்பிவிட்டால் மற்றவை எல்லாம்
தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்.
ஆதலால்தான் இவை நான்கையும் சேர்த்து
வைத்துக் கூறியுள்ளார் வள்ளுவர்.
காமக் கலன் என்பதற்கு விரும்பி அணியும்
அணிகலன் என்றும் விரும்பி ஏறிச் செல்லும்
மரக்கலன் என்றும் இரண்டுவிதமாகப்
பொருள் கொள்ளப்படும்.
காலந்தாழ்வு, மறதி, சோம்பல், தூக்கம்
இவற்றை கடைபிடித்து ஒழுகுபவர் நான்
கெட்டொழியப் போகிறேன் என்று தாமாக
முன்வந்து நடுகடலுக்குச் செல்லும் மரக்கலனில்
ஏறிச் செல்பவருக்கு ஒப்பாவர்.
நன்றாக வாழ விருப்பமா?
எந்த ஒரு செயலையும் இன்றே செய்யப் பழகு.
மறதி என்பதை அகராதியிலிருந்து
எடுத்துவிடு.
சோம்பல் கூடவே கூடாது.
பெருந்தூக்கம் வேண்டவே வேண்டாம்.
என்பதை உணர்த்தவே வள்ளுவர்
இந்தக் குறளைக் கூறியுள்ளார்.
English couplet :
"Delay, oblivion, sloth and sleep ; these four are
pleasure_boat to bear the doomed to ruin's shore"
Explanation :
Procrastination, forgetfulness ,idleness and sleep
these four things form the vessel which is desired by
those destined to destruction .
Transliteration :
"Netuneer maravi matidhuyil Naankum
Ketuneeraar kaamak kalan "
Comments
Post a Comment