பரியினும் ஆகாவாம்....
பரியினும் ஆகாவாம்....
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா நம் "
குறள் : 376
பரியினும் _வருந்திக் காப்பாற்றினாலும்
ஆகாவாம் _ ஆக மாட்டாதாம்
பாவல்ல _ ஊழால் அல்லாத, நமக்கு அல்லாத
உய்த்து _ கொண்டு போய்
சொரியினும் _ வீசி எறிந்தாலும்
போகா _ நீங்காது
தம் _ தமக்கு உரியவை
நமக்கு உரிமை இல்லாதப் பொருட்களை
எவ்வளவுதான் பாதுகாத்து வைத்தாலும்
தங்காது. நமக்கு உரியவையைக் கொண்டுபோய்
தூர எறிந்தாலும் அது நம்மை விட்டு அகலாது.
விளக்கம் :
வருந்திக் காப்பினும் ஊழால் நமக்கு இல்லாதவை
நம்மோடு வந்து சேராது.நமக்கு நிர்ணயிக்கப்பட்ட
எந்தப் பொருளையும் வேண்டாம் என்று
தள்ளி விட்டாலும்
அது நம்மைவிட்டு அகன்று போகாது.
இதனைத்தான் ஊழ் என்பர்.
ஊழ்வினைப் பயனை அனுபவித்துத்தான்
ஆக வேண்டும்.
நமக்கு என்று இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட
எந்தப் பொருளும் கிடைக்காமல் போகாது.
அதே நேரத்தில் நமக்கென்று விதிக்கப்படாத
எந்தப் பொருளையும் பெற்றுவிட முடியாது.
ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்
எவ்வளவுதான் உடம்பில் எண்ணெய்யைத்
தேய்த்து மண்ணில் புரண்டாலும் ஒட்டுற மண்தான்
ஒட்டும்.
ஆம்...நமக்கான அரிசியில்கூட இறைவன்
நம் பெயர் எழுதி வைத்திருப்பாராம்.
அப்படியானால் நமக்குரிய அரிசியை யாரும்
தட்டிப் பறித்துச் சென்றுவிட முடியாது.
அதே வேளையில் இன்னொருவருக்கான
அரிசியையும் எவ்வளவுதான்
குட்டிக்கரணம் போட்டாலும் பெற்றுவிட
முடியாது.
விதிப்படி நமக்கு எது கிடைக்க வேண்டுமோ அது
கிடைத்தே தீரும்.
வேண்டாம் வேண்டாம் என்றாலும்
கிடைக்கக் கூடியது கிடைக்காமல் போகாது.
விதி வலியது என்று இதைத்தான் சொல்வார்களோ!
English couplet :
"Things not your own will yield no good,
howe'er you guard with pain
Your own, howe'er you scatter them aboard, will yours remain "
Explanation:
Whatever is not conferred by fate cannot be
Preserved although it be guarded with most painful care;
and that , which fate has made cannot be lost,
although one should even take it and throw it away.
Transliteration :
"Paiyanum Aaka avan Paal alla Irunthuchu
choriyinum poka tham"
விதி வலியது என்பது முற்றிலும் உண்மை.அருமை.
ReplyDelete