பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து


நறுமுகையோ குறுநகையோ
தண்டலையோ தளிர் வனமோ
வண்டலை மதிமுகமோ
அன்றலர் தாமரையோ
என்றன் ஐயம் தீருமுன்னே
அகவை ஐம்பதென கைபேசி 
மகவுனக்கு வாழ்துரைக்க...
நெடுவரையன்ன 
நெடியபுகழ் கண்டு
நெடுநாள் வாழ்கவென
காற்றைத்  தூதனுப்பி
காதோடு கவி பாடுகிறேன்
வாழ்க பல்லாண்டு...பல்லாண்டு
பல்லாயிரம் ஆண்டு...
என்றென்றும் இன்றுபோல்
இளநகை கொண்டு!


பிறந்தநாள் வாழ்த்து


நட்பா ...?.நல்லுறவா....?
நவில இயலாதொரு பிணைப்பு
நெஞ்சம் நிறைய உம் நினைப்பு
எப்படி இப்படி என்றறியா வியப்பு
நேரப்படி வந்ததிந்த பிறப்பு
நேர்த்தியாய்த் தந்ததொரு வாய்ப்பு
நிலனன்ன வளங்களைச் சுமந்து
நீரன்ன உயிரொடு கலந்து
நெடுவரையன்ன நெடியபுகழ் கண்டு
வானன்ன வாழ்த்தும் வரம் கொண்டு
வாழ்க ! பல்லாண்டு...பல்லாண்டு
பல்லாயிரம் ஆண்டு
எம்  இதயங்களில் குடியிருந்து !









Comments

Popular Posts