பிறந்தநாள் வாழ்த்து

   பிறந்தநாள் வாழ்த்து

மொழியாய் வாழ்கின்ற முத்தமிழே!
பொழியும் மழையாய்
பொதிகைத் தென்றலாய்
எங்கும் ஒளியாய்
எவர்க்கும் நட்பாய் 
இனிக்கும் கரும்பாய்
சுவைக்கும் விருந்தோம்பல் தந்தாய்!
சுற்றிவரும் சிற்றெறும்பாய் 
உம் நினைவில்  சுற்றிட வைத்தாய்!
எழுத்துக்கலையைக் கற்றிட வைத்தாய்!
தமக்கையாய் தக்க துணை நின்றாய்!
நினைக்கையில் நெஞ்சம் இனித்தாய்
இன்றுபோல் என்றும் உவக்க
நாளெல்லாம் நல்லவை நடக்க
கடவுள் அருள் பொழிய
மன்னுக பெரும நீயென
மலர் தந்து மலர்க்கரம் கூப்பி 
வாழ்த்துகிறேன்...
வாழ்க பல்லாண்டு !

Comments