கண்ணின்று கண்ணறச் சொல்லினும்...

 கண்ணின்று கண்ணறச் சொல்லினும்...


"கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல் "
                                                          குறள்: 184

கண்ணின்று _ கண்ணெதிரே
கண்ணற _  கண்ணோட்டமின்றி
சொல்லினும் _சொன்னாலும்
சொல்லற்க _ சொல்ல வேண்டாம்
முன் _ முன்னால்
இன்று _ இல்லாமல்
பின்னோக்கா _பின்விளைவினை எதிர்பாராத
சொல் _ பேச்சு

நேருக்கு நேராக ஒருவரைப் பற்றி
கண்ணோட்டம் இல்லாமல் எதுவும்
சொல்லலாம். நேரில் இல்லாதவரைப் பற்றி
பின்விளைவுகளை ஆராயாது
எதுவும் கூறுதல் கூடாது.

விளக்கம். :

ஒருவரைப் பற்றி பேச வேண்டுமா....
துணிந்து முன்னால் நின்று பேசுங்க....
அப்படி பேச தைரியம் இல்லையா...
பின்னால் போய் இல்லாததையும்
பொல்லாததையும் பேசாதீங்க...   
அப்படி நீங்க ஒன்று பேச....அது சம்பந்தப்பட்ட
நபர் காதில் விழ...
அதனால் வம்பு வர...எதற்குங்க.. .
இந்த வீண் வம்பெல்லாம்...

ஒருவனின் எதிர்முகம் பார்த்துப் பேசும்
துணிவிருந்தால் பேச வேண்டும்.அப்படிப்
பேசும் பேச்சில் உண்மை இருக்கும்.
மறைந்திருந்து வீசப்படும் சொற்களில்
உண்மை இருக்காது.
அதனால் வரும் எதிர்வினைகள்
கடுமையாக இருக்கும். வரும் தீங்குதனை
ஆராயாமல் எவரைப் பார்த்தேனும்
வார்த்தைகளை விட்டுவிடக் கூடாது.
நேருக்கு நேர் பார்க்கவியலாது
புறங்கூறித் திரிய வேண்டாம்
என்கிறார் வள்ளுவர்.
எதுவாக இருந்தாலும் நேரில் பேசி விடுக.
முகத்தை நேருக்குநேர் எதிர் நோக்க இயலாத
சொற்களைப் பேசாதொழிக.

    
English couplet:.   184

"In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought "

Explanation :

Though you speak without kindness before
another's face  speak not in his absence 
words which regard not the evil subsequently
resulting from it.

Transliteration :

  " Kannindru Kannarach  Chollinum Sollarka
  Munnindru  Pinnokkaah Chol "

         
     
            

Comments

Popular Posts