உருவுகண்டு எள்ளாமை வேண்டும்....

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து "
                   குறள் :667

உருவு - வடிவம்
கண்டு - நோக்கி, பார்த்து
எள்ளாமை - இகழாதிருத்தல்
வேண்டும் -வேண்டும்
உருள் - உருளுகின்ற
பெரு - பெரிய
தேர்க்கு - வண்டிக்கு
அச்சாணி - அச்சு, இரும்பு முளை
அன்னார் - ஒத்தவர்
உடைத்து -உடையது


உருவத்தைக் கண்டு தாழ்வாக எவரையும்
நினைக்க  வேண்டாம்.
உருண்டு ஓடும் பெரிய தேருக்கு 
சிறிய அச்சாணி உதவுவது போன்று
மன உறுதி உடையவர்கள் செயலால்
உயர்ந்த செயல்களைச் செய்யக் கூடும்.

விளக்கம் : 

செயல் உயர்வானதாக இருக்காக
உருவம் காரணமாக இருக்காது.
சிறிய அச்சாணிதான் அதனைக்
கழற்றி விட்டு விட்டோமானால்
தேர் குடை சாய்ந்து விடும்.
எவ்வளவு உயரமான தேராக
இருந்தாலும் அதனை நிலை கொள்ளச்செய்து
நிறுத்த உதவுவது தேரில் இருக்கும்
சிறிய அச்சாணிதான்.

அதுபோலதான் யாரையும் இவர்
எளியவர், இவர் சிறியவர், இவர்
குள்ளமானவர், பார்க்க அழகில்லாதவர்
என்று தகுதியற்றவர் என்று 
குறைவாக எடைபோட்டுவிட வேண்டாம்.

சிறியவர்களாலேயும் பெரிய
சாதனைகளைச் செய்ய முடியும்.
சிறியவர்கள் சொல்லும் கருத்துக்களும்
ஏற்ற காலத்தில் உதவியாக
இருக்கக் கூடும்.
உருவம் ஒரு பொருட்டல்ல.
மன உறுதியும் செயலார்வமும்
கொண்டவர்கள் யாராக இருந்தாலும்
அவர்களால் அச்சாணி போன்று
ஏற்ற நேரத்தில் நல்ல உதவி
கொடுக்க முடியும்.

ஒருவரின் வடிவம் பிறப்பால் அமைவது.
உருவத்தோற்றம் இகழ்ந்து ஒதுக்குவதற்குக்
காரணமாக இருக்கக் கூடாது.

ஆதலால் யாரையும் உருவத்தைப் பார்த்து
இகழ்தலைத் தவிர்த்தல் வேண்டும்.
சிறியோரிடமும் உயர்ந்த செயல்கள்
இருக்கும் என்பதை மனதில்
வைத்துக் கொள்ளுங்கள்
என்கிறார் வள்ளுவர்.

உயர்வுக்கு உருவம் ஒரு  தடையல்ல.

English couplet :

"Despise not men of modest bearing; Look not at form,
Not men are ;For some there live high functions sharing
Like linch- pin of the mighty car. "

Explanation : 

Let none be deposited for their size;.  for the world
has those who resemble the linch- pin of
the big rolling car.

Transliteration :

"Uruvukantu ellaamai ventum urulperundherukku
Achchaani annaar utaiththu "

Comments

Popular Posts