உள்ளியது எய்தல் எளிதுமன்....

உள்ளியது எய்தல் எளிதுமன்...

"உள்ளியது  எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின் "
                               குறள்   :  540

உள்ளியது - நினைத்தது, கருதியது
எய்தல்  - அடைதல்
எளிது  -  வருந்தாமல் கிடைக்கக் கூடியது
மன் - (அசைச் சொல்)
மற்றும் - பின்னும்
தான் - தான், ஒருவன்
உள்ளியது - எண்ணியது
உள்ளப் பெறின் -இடைவிடாது நினைக்கக்
                                கூடுமினால்


நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக்
கொண்டிருந்தால் நினைத்ததை நினைத்தபடியே
அடைவது எளிது.

விளக்கம் :

நாம் ஒரு செயலை அடைய விரும்பினால்
தொடர்ந்து அதைப் பற்றிய
சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.
இடையில் தொய்வு ஏற்பட்டு
விட்டுவிடக் கூடாது.
எனக்கு இது வேண்டும்.. வேண்டும்
என்று உள் மனது சொல்லிக்
கொண்டே இருக்க வேண்டும்.
அந்த இடைவிடாத ஆசை அதாவது
விருப்பம் அதனை அடையும்வரை 
நம்மை ஓய விடாது துரத்தும்.

எண்ணிக் கொண்டே இருந்தால் எப்படி
பொருளை அடைய முடியும் என்று
கேட்கலாம்?
தான் நினைத்ததை அடைய வேண்டும்
என்று குறி வைத்துவிட்டாலே மனச்சோர்வு
அகன்று போகும்.
அதை அடைய வேண்டும் என்ற
நோக்கில் நமது செயல் யாவும் 
அதைப் பற்றியதாகவே இருக்கும்.
குறிக்கோளில் உறுதியாக இருந்தால்
வெற்றி நிச்சயம்.

நமது விருப்பத்தைப் பற்றிய நினைவு 
நெஞ்சில் எப்போதும்
நிறைந்திருக்க வேண்டும்.
வேறு நினைவு வந்து குறுக்கிடவிடாமல்
அதே சிந்தனையில் இருக்கும் வீரர்களுக்கு
மட்டுமே வெற்றி கைகூடும்.

நினைத்ததை நினைத்த வண்ணம்
எய்தலாம் நினைத்ததையே நினைத்துக்
கொண்டிருந்தால் என்கிறார் வள்ளுவர்.

"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் "

என்ற குறளிலும் வள்ளுவர்
இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்
என்பது நோக்கத்தக்கது.

English couplet:

"'Tis easy what thou hast in mind to gain, if what thou
hast in mind that mind retain "

Explanation:

It is easy for one to obtain whatever he may think of,
if he can again  think of it.

Transliteration :

"Ulliyadhu eydhal elidhuman matrundhaam
ulliyadhu ullap perin"




Comments

  1. This kural teaches how to achieve a goal in life. If you have an ambition of achieving something in life, till you reach the goal your concentration should be on your ambition. Then you will succeed in getting it. The writer of this article has a vast knowledge of kural and in Tamil literature. It is exposed here. SUPERB.

    ReplyDelete
  2. நம் எண்ணங்களை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் எண்ணியவற்றை அடையலாம் என்ற வள்ளுவரின் கருத்தை பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts