கதம்பப் பருப்புத் துவையல்

   கதம்பப் பருப்புத் துவையல்


பெண்களுக்கு
இருக்கும் பிரச்சினைகளிலேயே 
பெரிய பிரச்சினை என்ன என்றால்
சமையல்தான்.

விடிந்ததும் இன்று என்ன 
என்ன குழம்பு வைப்பது?
என்ன பொரியல் வைப்பது?
என்று மண்டையே குழம்பிப்
போய்விடும்.

குழம்பு வைத்தாலும் தொட்டுக் கொள்ள
கூட்டு வைக்க வேண்டும்.
கூட்டுக்குக் காய்கறி வெட்ட
வேண்டும். அதெற்கெல்லாம் எங்கே
நேரம் இருக்கிறது?

அதனால் புளியோதரையோ தக்காளிசாதமோ
லெமன் சாதமோ தயிர்சாதமோ
எதுவாக இருந்தாலும் எடுத்துக் கொண்டு
வேலைக்குப் போகிற
பெண்கள் ஓடுவர்.
பெரும்பாலான நாட்களில்
 ஊறுகாயை தான் தொட்டுக் கொள்வதற்கு
 வைத்திருப்போம்.
 ஊறுகாய்
 கொண்டு செல்வதற்குப் பதிலாக
பத்து வகையான
துவையல் பொடி செய்து
வைத்துக் கொண்டால் போதும்.
நாளும் வெவ்வேறு வகையான
சுவையில் சாப்பிடலாம்.

வாருங்கள். முதலாவது
கதம்பப் பருப்புப் பொடி எப்படிச்
செய்வது என்று பார்ப்போம்.


கதம்பப் பருப்புப் பொடி
செய்ய தேவையான
பொருட்கள்:

பாசிப்பருப்பு   =  2கையளவு
துவரம்பருப்பு   = 2  கையளவு
கடலைப்பருப்பு  = 1 கையளவு
உளுத்தம் பருப்பு   = 1 கை அளவு
கொள்ளுப் பயிறு - ஒரு கையளவு
நிலக்கடலை=    கையளவு
தேங்காய்  ( துருவியது) = ஒரு டம்ளர் அளவு
வற்றல்         =  ஆறு
பூண்டு          =.    8 பல்
புளி               =    சிறிதளவு
கறி வேப்பிலை =  இரண்டு கொத்து
நல்லெண்ணெய்  = ஒரு கரண்டி

செய்முறை:

ஒரு கடாயில் ஒரு கரண்டி எண்ணெய்
ஊற்றி 
பாசிப்பருப்பு, துவரம்பருப்பு 
கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு
கொள்ளுப்பயிறு,பூண்டு ஆகிய 
ஆறையும்  போட்டு வறுக்க வேண்டும்.
வறுக்கும் போது எப்போதும் அடுப்பு
மெதுவாக எரியட்டும்.
மணம் வரும்வரை நன்றாக
கிளறிவிட்டுக்கொண்டே இருங்கள்.
சற்று வறுபட்டதும் புளி,வற்றல்
இரண்டையும் 
அதனுடன் சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்னர்   கறிவேப்பிலையையும்
போட்டு கிளறிவிட வேண்டும்.
இரண்டு நிமிடத்தில் கறிவேப்பிலையும்
வறுபட்டு விடும்.

இப்போது அடுப்பை அணைத்துவிட
வேண்டும்.
சூடு ஆறியதும்
மிக்சியில் போட்டுப் பொடியாக
திரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாவாகத் கிரிக்கக் கூடாது.
துவையல் பதத்தில் திரிக்க வேண்டும்.

சூடு ஆறியதும் ஒரு டப்பாவில்
போட்டு வைத்தால்
ஒரு மாதம் வரை கெடாமல்
அப்படியே இருக்கும்.
சாப்பிடும்போது நல்லெண்ணெய்
ஊற்றி பிசைந்து சாப்பிட 
விருப்பம் உள்ளவர்கள் 
நல்லெண்ணெய் ஊற்றி
சாப்பிடலாம்.

வெறும் தண்ணீர் விட்டு
குழைத்து  சாதத்தோடு போட்டு
சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
மணமாகவும் இருக்கும்.
எந்த சாதத்திற்கும் 
தொட்டுக்கொள்ள கூட்டு இல்லையே 
இனி
கவலை வேண்டாம்.
கதம்பத் துவையல் ஒன்று போதும்.

செய்வதும் எளிது. 
சாப்பிடும்போது தண்ணீர் சேர்த்து
பிசைவதால் நிறைய நாள் கெடாமல்
இருக்கும்.

கூடுதல் சுவைக்காக:


இரண்டு கை அளவு தேங்காய்
துருவல் எடுத்து மிக்சியிலிட்டு
நாலு சுற்று சுற்றிவிட்டு இரண்டு கை
பொடியைப்போட்டு சிறிது 
தண்ணீர் ஊற்றி மறுபடியும்
மிக்சியை நாலு சுற்று சுற்றவிட்டு
துவையல் பதத்திற்கு எடுத்து
வைத்து சாப்பிடுங்கள்.
வேறு எந்தக் குழம்பும் 
வேண்டாம். சுடு சாதத்தில்
போட்டு சாப்பிட அவ்வளவு
சுவையாக இருக்கும்.சாப்பிட்டுவிட்டு
கையை மணத்துப் மணத்துப் பார்ப்பீர்கள்.
அவ்வளவு மணமாக இருக்கும்.

எண்ணெய் ஊற்றி சாப்பிடுவதைவிட
தண்ணீர் விட்டு பிசைந்து
சாப்பிட்டால்தான் கூடுதல் சுவையாக
இருக்கும்.

உடனே செய்து பாருங்கள்.


அடுத்து வருவது  பாசிப்பருப்புத் துவையல்.....


                              






 










Comments

Popular Posts