அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்....

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்....


"அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை"

                 குறள். : 814


அமர் - போர்
அகத்து - இடையில்
ஆற்றறுக்கும்- வலிமையைக் கெடுத்துக்கொண்டு ஓடும்
கல்லா - பயிற்சி பெறாத, அறிவில்லாத
மா - குதிரை
அன்னார் - ஒப்பாவரோடு
தமரின்-தம்மவர் என்று சேர்ந்திருப்பதைவிட
தனிமை - தனிமையாக இருத்தல்
தலை- நன்று , சிறப்பு

போர் செய்துகொண்டிருக்கும்போது 
கீழே தள்ளி விட்டுவிட்டு
ஓடும் அறிவற்ற குதிரை போன்றவரோடு நட்பு
கொண்டிருப்பதைவிட
நட்பே இல்லாமல் தனிமையில் இருப்பது
நலம் தரும்.

விளக்கம்:

நன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் காலத்தில்
எந்தவித இடையூறும் செய்யாது
மேலே ஏற்றிக்கொண்டு செல்கிறது
ஒரு குதிரை. அதே குதிரையைப்
போர்க்களத்தில்கொண்டு விடப்படுகிறது.
போர்ச்சூழலைப் பார்த்ததும் குதிரை
மிரண்டு போகிறது.
போர் கலக்கத்தை ஏற்படுத்திவிட
முதுகில் இருந்த வீரனை கீழே
தள்ளி விட்டுவிட்டு ஓட்டம் 
பிடிக்கிறது குதிரை.
பயிற்சியின்மையாக இருக்கலாம். அல்லது
அறிவில்லாததாகக்கூட இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் குதிரை 
இறுதிவரை போர் வீரனோடு போர்க்களத்தில்
இருந்தாக வேண்டும்.அப்படிக் கூடவே 
இல்லாதிருந்தால் அது
மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.

அதேபோன்று நண்பன் என்றால்
எந்தச் சூழலிலும் கூடவே இருக்க
வேண்டும்.ஒரு துன்பம் வரும்போது
துணையாக நின்று உதவாமல் 
உதறித் தள்ளிவிட்டுவிட்டுச் செல்லும்
பண்பு கொண்டவரோடு நட்பு கொள்வதைவிட
தனிமையில் இருப்பது நலம்.

நட்பு என்றால் இடர் வந்தபோதும்
இறுதிவரை கூட இருக்க வேண்டும்.
இடையில் கையை விலக்கிவிட்டு விட்டு
ஓடும் நட்பு தேவையில்லை என்கிறார்
வள்ளுவர்.

English couplet:

"A steed untrained will leave you in the tug of war
Than friends like that to dwell alone is better far"

Explanation:

Solitude is more to be desired than the society
of those who resemble the untrained horses
which throw down their riders in the fields of battle.

Transliteration: 

"Amarakaththu aatrarukkum kallaamaa annaar
Thamarin thanimai thalai"

Comments

Popular Posts