மாத்திரை என்றால் என்ன?

  மாத்திரை என்றால் என்ன?

ஒரு சொல்லை ஒலிப்பதற்கு நாம்
எடுத்துக்கொள்ளும் கால அளவு மாத்திரை 
எனப்படும்.

"கண் இமை நொடி என் அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உயர்ந்தோர் கண்டலாறே "
என்கிறது தொல்காப்பியம்


"இயல்பெழு மாந்தர் இமை நொடி மாத்திரை "
என்கிறது நன்னூல்.

மனிதர்கள் இயல்பாகக் கண் இமைப்பதற்கு
 எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோமோ 
 அதுதான் மாத்திரையின் கால அளவு.
 
மனிதர்கள் இயல்பாக கை நொடிக்கும்
அதாவது சொடுக்கு போடுதல் 
என்று சொல்வோமே 
அதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்
கொள்கிறோமோ அதுதான்
மாத்திரை.

இயல்பெழு என்பதை மனதில்
பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
நோய்வாய்ப்பட்டவரல்ல.
இயல்பாக நல்ல நிலையில்
இருக்கும் ஒருவரின் கண்ணிமைக்கும்
நேரம் அல்லது
கை நொடிக்கும் நேரம் மட்டுமே
கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.


கால், அரை ஒன்று இரண்டு என்று
மாத்திரை கணக்கிடப்படுகிறது.


ஒரு மாத்திரை கால அளவு
ஒலிக்கப்படக்கூடியவை

உயிர்க்குறில்
உயிர்மெய்க்குறில் 
ஆகிய குறில் எழுத்துகளுக்கு ஒரு மாத்திரை.

உயிர் குறில் ஐந்து.
அ ,இ, உ, எ ,ஒ இவை ஐந்தும்
உயிர்க்குறில்  எழுத்துகள்.

இவற்றிற்கு ஒரு மாத்திரை

உயிர் குறில் ஐந்து எழுத்துகளோடும்
மெய் எழுத்து பதினெட்டும்
சேர்ந்து தொண்ணூறு உயிர்மெய்க்
குறில் எழுத்துகள் தோன்றும்.
இவற்றுக்கும் 
கால அளவு ஒரு மாத்திரை.

இப்போது உயிர்க்குறில்
உயிர்மெய்க்குறில் எழுத்துகளுக்கு
ஒரு மாத்திரை என்பதை
மனதில்  பதியவைத்துக்
கொள்ளுங்கள்.

இரண்டு மாத்திரை கால அளவு
 ஒலிக்கச் படக்கூடியவை:

உயிர் நெடில் 
உயிர்மெய் நெடில்
எழுத்துகளுக்கு இரண்டு 
மாத்திரை.


உயிர் நெடில் எழுத்துகள் ஏழு.
ஆ ஈ ஐ ஏ ஐ ஓ ஔ இந்த ஏழு உயிர்
நெடில் எழுத்துகளும் பதினெட்டு
மெய் எழுத்துகளோடு சேர்ந்து
பிறக்கும் உயிர் மெய் நெடில் எழுத்துகள்
நூற்று ஐம்பத்து ஆறு ஆகும்.
இவற்றிற்கான கால அளவு
இரண்டு மாத்திரை.

இப்போது உயிர் நெடில் ஏழு.
உயிர்மெய் நெடில் நூற்று ஐம்பத்தாறு
எழுத்துக்களுக்கும் இரண்டு மாத்திரை
என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

மெய் எழுத்துகள் பதினெட்டு.
அதாவது,
                   க்  ங் 
                   ச்   ஞ்
                    ட்  ண்
                    த்  ந்
                    ப்   ம்
                    ய்  ர்
                    ல்  வ்
                    ழ்  ள்
                    ற்  ன்

  ஆகிய பதினெட்டு மெய் எழுத்துகளுக்கும்
  அரை  மாத்திரை.


ஆய்தம்  -  ஃ.  1/2 மாத்திரை

ஒரு மாத்திரைக்குக்
கால அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால்அரைக்கும் காலுக்கும் எவ்வளவு
கால அளவு என்பதை எப்படி
நிர்ணயம் செய்வது?
அதற்கும் ஏதாவது கால அளவு
உண்டா என்று தேடினால் 
அதற்கும் செய்யுள்உள்ளது.

"உள்ளல் காலே ஊன்றல் அரையே"
என்கிறது ஒரு பாடல் வரி.

நினைப்பதற்கு உரிய காலம் கால்
மாத்திரை.
நினைத்தது மனதில் பதியும்
காலம் அரை மாத்திரை .


குற்றியலுகரம் அரை மாத்திரை.

குற்றியலிகரம் அரை மாத்திரை

ஐகாரக்குறுக்கம் மொழிமுதலில்
வரும்போது மட்டும் அரை மாத்திரை.

ஐப்பசி என்ற சொல்லில் ஐகாரக்குறுக்கம்
மொழிமுதல் வந்துள்ளது.

ஐகாரக்குறுக்கம் மொழி இடை கடை
ஆகிய இடங்களில் வரும்போது
ஒரு மாத்திரை.

கடைசி  - மொழி இடையில் ஐகாரக் குறுக்கம்
வந்துள்ளது.
மழை -  மொழி இறுதியில் ஐகாரக் குறுக்கம்
வந்துள்ளது.

ஔகாரக்குறுக்கம் மொழி முதல் வரும்போது
மட்டும் ஒரு மாத்திரை.

ஔவையார்
 வௌவால்
ஆகிய சொற்களில்
 ஔகாரக்குறுக்கம் மொழி முதல்
 வந்துள்ளது.

மகரக்குறுக்கம் கால் மாத்திரை

ணகர னகர ஒற்று எழுத்துக்களுக்கு
அடுத்து வரும் மகர மெய் தன்
மாத்திரை அளவில் குறைந்து
ஒலிக்கும்.இது மகரக்குறுக்கம்
எனப்படும்.

போன்ம்
உண்ம்
மருண்ம்
உண்ம்

ஆய்தக்குறுக்கம் கால் மாத்திரை.

நிலைமொழி ஈற்றில் லகர ளகர
 மெய் எழுத்து வந்து வருமொழி முதலில்
 தகரம் வந்தால் நிலைமொழி ஈற்றிலுள்ள
 லகர ளகர மெய் எழுத்துகள் ஆய்த எழுத்தாக
 மாறிவிடும்.
அல் + திணை = அஃறிணை
முள் + தீது= முஃடீது

இந்த ஆய்த எழுத்து தன் மாத்திரை அளவில்
குறைந்து ஒலிக்கும்.

அதாவது கால் மாத்திரை அளவே ஒலிக்கும்.


இப்போது உயிளபெடை
ஒற்றளபெடை ஆகியவற்றிற்குமான
மாத்திரை அளவைப் பார்ப்போம்.

முதலாவது அளபெடை என்றால் 
என்ன? என்பதைத்
தெரிந்து கொண்டால் அதன் மாத்திரை
  அளவை நாமே அறிந்து கொள்ளலாம்.
  
இசைகெடின்
 மொழி முதல்
இடைகடை நிலை நெடில்
அளபெழும் அவற்று
இனக்குறில் குறியே!

என்கிறது நன்னூல்இசைகெடின்.

அதாவது செய்யுளின் ஓசைக்குறையும்போது
சொல் முதலிலும் இடையிலும் இறுதியிலும்
வரும் நெடில் எழுத்துகள்   நீண்டு ஒலிக்கும்.
நெடில் தனக்கு இனமான குறில் எழுத்தைத்
தன்னோடு சேர்த்துக் கொள்ளும்.
குறிலாக இருந்தால் அது நெடிலாக
மாறித் தன் இன  எழுத்தை 
அளபெடுத்துக் கொள்ளும்.
          

                 உயிரளபெடை :

( எடுத்துக்காட்டு)

வரூஉம் 
கெழீஇய
தொழாஅர்

ஓஒதல்
ஆஅதும்


உரனசைஇ
வரனசைஇ


உயிரளபெடை மாத்திரை அளவு மூன்று.


ஒற்றளபெடை  :
(எடுத்துக்காட்டு)


செல்க -செல்ல்க
அரங்கு -அரங்ங்கு

இலங்ங்கு 
கலங்ங்கு
         
  ஒற்றளபெடை  மாத்திரை ஒன்று Comments

  1. நல்ல, தெளிவான எளிமையான தயாரிப்பு

    ReplyDelete

Post a Comment

Popular Posts