சின்னஞ்சிறு கிளியே....

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா....

பாரதியின் கண்ணன் பாட்டு
பாரதியின் கண்ணம்மா பாட்டு
 இரண்டும் அதிகம்
பேசப்படும் பாடல்கள்.

கண்ணன் பாட்டு தெரியும்.
கண்ணம்மா பாட்டா?
அப்படி ஒரு பாட்டு பாரதி
பாடியிருக்கிறாரா என்று
கேட்கிறீர்களா?

பாரதி கண்ணனை குழந்தையாக
உருவகித்துப் பாடிய பாடலான
 சின்னஞ்சிறுக் கிளியே
என்ற பாடலைத்தான் நான்
கண்ணம்மா பாட்டு என்கிறேன்.

இந்தப் பாடலில் 
கண்ணனை ஒரு குழந்தையாக எப்படி
எப்படி எல்லாம் கொஞ்சி
மகிழ்கிறார் பாரதி என்பதைப்
பாருங்கள்.

கண்ணன் என்ற கண்ணம்மா
பாரதியை என்னென்ன
 பாடுபடுத்தியிருக்கிறாள்  என்பதைச்
சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்டிருக்கிறார்.

கண்ணம்மா
பாரதியைத்
திக்குமுக்காட வைத்திருக்கிறாள்.
சஞ்சலப்படுத்தியிருக்கிறாள்.
ஓடி விளையாட வைத்திருக்கிறாள்
உச்சி குளிர வைத்திருக்கிறாள்.
கள்வெறி கொள்ள வைத்திருக்கிறாள்.
கண்ணின் இமையாய் இருந்திருக்கிறாள்.
நெஞ்சத்தில் அள்ளி அணைத்து
ஆனந்தப்பட வைத்திருக்கிறாள்.
உயிராய் உணர்வாய் உறவாய்
 இருந்து மகிழ வைத்திருக்கிறாள்.

அதைத்தான் பாரதி தனது
சின்னஞ்சிறு கிளியே என்ற பாடலில்
சொல்லிப் சொல்லிக்
கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.
பாரதியின் கண்ணம்மாவை நாமும்
கொண்டாட வேண்டாமா?

வாருங்கள். நாமும் 
பாரதியோடு சேர்ந்து கண்ணம்மாவைப்
கொண்டாடுவோம்.


"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என்முன்
ஆடிவரும் தேனே!
ஓடிவருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தழுவுதடி!
உச்சிதனை முகர்ந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடவோ கண்ணம்மா
உன்மத்தமாகுதடி
சற்றுன் முகம் சிவந்தால் மனது
சஞ்சலமாகுதடி
நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு
நெஞ்சம் பதைக்குதடி
உன்கண்ணில் நீர் வடிந்தால் என்நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி
என்கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ
சொல்லு மழலையிலே கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பாலே எனது
மூர்க்கம் தவிர்த்திடுவாய்
இன்பக் கதைகளெல்லாம் உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ
அன்பு தருவதிலே உன்னை நேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ
மார்பினில் அணிவதற்கே உன்னைப்போல்
வைர மணிகளுண்டோ
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப்போல்
செல்வம் பிரிது முண்டோ?"
               - பாரதியார்

அருமையான பாடல் இல்லையா?
பாடி மகிழுங்கள்.

Comments

Popular Posts