பொருளல் லவரைப் பொருளாகப் செய்யும்....

     பொருளல் லவரைப் பொருளாகப் செய்யும்....

"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 
பொருளல்ல தில்லை பொருள்"
                        குறள்    : 751


பொருளல்லவரை- மதிக்கபடத்தக்க பண்பு
                                        இல்லாதவரை
 பொருளாக - மதிப்புடையவராக
 செய்யும் - செய்யக்கூடியது
 பொருள் - செல்வம்
அல்லது - அல்லாமல்
இல்லை - இல்லை
பொருள் -(  வேறு )பொருள்

ஒருபொருளாக மதிக்கத் தகாதவரையும்
மதிப்புடையவராகச் செய்வது செல்வம்.
அந்தச் செல்வத்தைத் தவிர  சிறந்த 
பொருள் உலகில் வேறு ஒன்றும் இல்லை.

விளக்கம் : 

செல்வம்தான் ஒருவனுக்கு மதிப்பும்
மரியாதையையும் பெற்றுத்தரும்.
ஒரு மதிப்பும் இல்லாதவரையும் 
மதிப்புடையவராக
மாற்றும் வல்லமை செல்வத்திற்கு
உண்டு. 
மக்கட் செல்வம், கல்விச் செல்வம்
அறிவுச் செல்வம் ,பொருட்செல்வம்
என்று எல்லாவற்றையும்
செல்வமாகக் கருதுகிறோம்.
நாம் செல்வமாகக் கருதும் இவை
எல்லாவற்றுள்ளும்
மதிப்பும் மரியாதையும் பெற்றுத்தரும் செல்வம்
ஒன்று உண்டு என்றால் அது
பொருட்செல்வம் மட்டும்தான்.
செல்வத்தைத்தவிர வேறு எந்தப்
பொருளைப் பெற்றிருந்தாலும் அதனால்
பெரிய மதிப்பு வந்துவிடப் போவதில்லை.
செல்வம் இல்லை என்றால் ஒருவர்
எவ்வளவு அறிவுடையவராக இருந்தாலும்
உலகம் அவரை ஒரு பொருட்டாக 
மதிக்காது.ஒருபொருட்டாக மதிக்கத்தக்க பண்பு
எதுவும் இல்லாதவரையும் மதிப்புமிக்க
மனிதராக மாற்ற வல்லது பொருட்செல்வம்.
வேறு எந்தப் பொருளுக்கும் அத்தகைய
வலிமை இல்லை.
இதுதான் உலக எதார்த்தநிலை.

ஒரு பொருளாக மதிப்பதற்குத் தகுதி இல்லாதவரையும்
பிறர் மதிக்கும்படியாகச் செய்யக்கூடியது
பொருட்செல்வம். அதைத்தவிர வாழ்வுக்கு வேறு
சிறந்த பொருள் எதுவும் இல்லை
என்கிறார் வள்ளுவர்.

பொருட்செல்வத்தின் இன்றியமையாமையை
வலியுறுத்துவதற்காகவே வள்ளுவர்
பொருள் என்ற சொல்லை மறுபடியும் மறுபடியும்
பயன்படுத்தியுள்ளார். 

இந்தக் குறளில் பொருள் என்ற ஒரே சொல்லை பல 
பொருள்களில் கையாண்டுள்ளார் வள்ளுவர்.
அதனால் இந்தக் குறள் 
சொற்பொருள் பின்வருநிலை அணிக்கு
எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.

English couplet :

"Nothing exists save wealth,that can change 
man of nought to worthy man"

Explanation :

Besides wealth there is nothing that can
change people of no importance into
those of some importance.

Transliteration:

"Porulal lavaraip porulaakach cheyyum
porulalladhu illai porul"
Comments

Post a Comment

Popular Posts