குடிதழீஇக் கோலோச்சும் மாநில....

குடிதழீஇக் கோலோச்சும் மாநில ....



குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு "
                            குறள் :.    544

குடி - குடிமக்கள்
தழீஇ -அரவணைத்துஏன்
கோலோச்சும்- நல்லாட்சி செய்யும்
மாநில - பெருநிலம் 
மன்னன்- ஆட்சி செய்பவன்
அடி- வழியில்
தழீஇ - இணைந்து,சேர்ந்து
நிற்கும் - நிலைத்திருப்பர்
உலகு- குடிமக்கள்


மன்னன் குடிமக்களை அரவணைத்து நல்லாட்சி 
செய்பவனாக இருந்தால் குடிமக்கள்
ஆட்சியாளன் கொள்கையைப் பின்பற்றி
 அவன் வழியில் நிலைத்து நிற்பர்.

விளக்கம்:

குடிமக்களை அரவணைத்து அன்பு செலுத்தி,
அவர்களுக்கு வேண்டியவற்றைச்
செய்துகொடுத்து,அவர்கள் நலன்
சார்ந்த செயல்களைச் செய்துவரும்
மன்னன் பின்னால் ஒட்டுமொத்த
மக்களும் அணிவகுத்து நிற்பர்.

மன்னன் எல்லாத்தரப்பு மக்களும்
விரும்பும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும்.
விளிம்பு நிலையில் இருக்கும்
மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு
திட்டங்கள் வகுத்து செயல்பட வேண்டும்.
குடிமக்களின் தேவைகளை அறிந்து
அதனை நிறைவு செய்யும் விதத்தில்
அரசு செயல்பட வேண்டும்.
அப்படிப்பட்ட அரசை மக்கள் முழுமனதோடு
ஏற்றுக்கொள்வர்.
அரசின் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டு
நடப்பர்.
அரசினைக் காப்பது அரசின் கடமை
அல்ல. குடிமக்களைக் காப்பதே
அரசின் தலையாயக் கடன்.
குடிமக்கள்
கருத்துக்கு மதிப்பளித்து குடிக்களுக்காக
ஆட்சி நடத்தும் அரசை உலகமே கொண்டாடும்.
மக்களும் மன்னனுக்குத் துணையாக
அவன் வழியில் நடப்பர் 
 என்கிறார் வள்ளுவர்.


English couplet:

"Whose heart embraces subjects all lord over mighty land
Who rules
the world his feet embracing stands"

Explanation :

The world will constantly embarace the feet of the great King
who rules over his subjects with love

Transliteration :

"Kutidhazheeik kolochchum maanila mannan
Atidhazheei nirkum ulaku"





Comments

Popular Posts