காலாழ் களரில் நரியடும்...

காலாழ் களரில் நரியடும்.....

"காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு "

                           குறள் :500

கால் -பாதம்
ஆழ் - ஆழமான
களரில் -சேற்றுநிலத்தில் இருக்கும்போது 
நரி - நரி
அடும் - கொன்றுவிடும்
கண் - விழி
அஞ்சா - அஞ்சாத
வேல் - நுனி கூர்மையான ஓர் ஆயுதம்
ஆள்- ஆண்மகன்,வீரன்
முகத்த- முகத்தையுடைய
களிறு - யானை


வேலேந்திய வீரரை தன்
தந்தங்களால் கோர்த்தெடுக்கும்
வலிமை கொண்ட யானையையும் 
அதனுடைய கால்கள் சேற்றில்
அகப்பட்டபோது நரிகள் 
 எளிதாகக் கொன்றுவிடும்.


விளக்கம் :

யானை உருவத்தில் பெரியது.
 வலிமைமிக்கது.
யானையின் வலிமையின்முன் கையில் வேல் 
வைத்திருக்கும் வீரரும் எதிர்த்து
நிற்க அஞ்சுவர்.
அப்படியே எதிர்த்து நின்றாலும் தோற்றுப்
போவது உறுதி.

இப்படி வலிமையுடைய யானையானது
ஓர் இக்கட்டான சூழலில் இருக்கிறது.
அந்த நேரத்தில் வலிமையில்
குறைந்தவர்களும் எதிர்த்து நின்று 
வெற்றிபெற முடியும்.

யானையின் கால்கள் சேற்றில் 
அகப்பட்டுக் கொள்கின்றன.
இப்போது யானையால் சேற்றிலிருந்து
வெளிவர முடியவில்லை.
இந்தச் சூழலை ஒரு தந்திரக்கார
 நரியானது பார்க்கிறது. 
 சூழலை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்
கொண்டால் என்ன? என்று
நரியின் குதர்க்கமான புத்தி
கணக்குப் போடுகிறது.
யானையின் இயலாமையைத் தனக்குச்
சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு
 யானையை எளிதாக வென்றுவிடுகிறது.
 கொன்று போட்டுவிடுகிறது.
 வலிமை சிறுமைப்பட்டுப் 
 போய்விடுகிறது.
 
வெற்றி பெறுவதற்கு சூழல்தான்
முக்கிய காரணம்.

இடனறிந்து செயல்பட்டால்
வலிமையையும் எளிதாக வீழ்த்தி
வெற்றி கண்டுவிட முடியும்
என்கிறார் வள்ளுவர்.


English couplet :

"The jackal slays, in miry paths of foot -betraying fen
The elephant of fearless eye and tusks transfixing armed men"


Explanation :

A fox can kill a fearless warrior -faced elephant
if it go into mud in which it's legs sink down.


Transliteration :

"Kaalaazh kalaril  nariyatum kannanjaa
Velaal mukaththa kaliru "

Comments

Popular Posts