அஞ்சுவது அஞ்சாமை பேதைமை.....

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை....



அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் "

                     குறள் : 428


அஞ்சுவது- பயப்படத் தக்கவற்றிற்கு
அஞ்சாமை -பயப்படாதிருப்பது
பேதைமை - மதியீனம்,அறியாமை
அஞ்சுவது - அஞ்சத் தக்கனவற்றிற்கு
அஞ்சல் - பயப்படுதல்
அறிவார் - அறிவுடையார்
தொழில் - செயல்


பயப்படத் தக்க செயல்களுக்குப்
பயப்படாதிருப்பது அறியாமையாகும்.
பயப்படத் தக்க செயல்களுக்குப்
பயப்படுதல் அறிவுடையவர்
செயலாக இருக்கும்.


விளக்கம் :

எதற்கும் அஞ்ச மாட்டேன்
என்று சிலர் மார்தட்டித்
திரிவர். தான் மட்டும்தான் வீரன்.
மற்றவர்கள் எல்லாம் தன்னைவிட
மட்டம் என்று காட்டிக் கொள்வதற்காகச்
செய்யப்படும் தம்பட்டம்.
இது எல்லா இடங்களிலும் சாத்தியப்படுமா
என்றால் இல்லை என்கிறார் வள்ளுவர்.
'பாம்பைப் பார்த்தால் படையும்
நடுங்கும்.' 
நான் பயப்பட மாட்டேன் என்று 
பாம்பை மிதித்தால் பாம்பு
கொத்தத்தான் செய்யும்.

அஞ்ச வேண்டிய செயல்கள் சில
உண்டு. அதற்கு அஞ்சித்தான் 
ஆக வேண்டும்.
தவறான செயல்களில் ஈடுபட
அஞ்ச வேண்டும்.
உண்மைக்குப் புறம்பாகப் பேச 
அஞ்ச வேண்டும்.
பயங்கரமான விலங்குகளைக் கண்டால்
அஞ்சி ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
துஷ்டனைக் கண்டால் அஞ்சி
ஒதுங்க வேண்டும்.
இப்போதும் அஞ்ச மாட்டேன் என்றால்
அதற்கான பின்விளைவுகள்
உங்களைப் பாதிப்பதாகவே இருக்கும்.
அதனால்தான் இப்படிப்பட்டவர்களைப்
 பேதை என்கிறார் வள்ளுவர்.

அஞ்சத்தகுவனவற்றிற்கு அஞ்ச
வேண்டும் .
இதனால் நீங்கள் கோழை என்பது
பொருளல்ல.
அறிவுடையார் என்றால் இப்படித்தான்
நடந்து கொள்வார்.
அறிவுடையவரின் பண்பே 
அஞ்சத் தக்கனவற்றிற்கு
அஞ்சுவது தான்.

"பயப்பட வேண்டியனவற்றிற்குப்
பயப்படாதிருத்தல் அறிவின்மை;
பயப்படத்தக்கச் செயல்களுக்குப்
பயப்படுதல் அறிவுடைமை"
என்கிறார் வள்ளுவர்.


English couplet :

"Folly meets fearful ills with fearless heart.
To fear where cause of fear exists is wisdom' part"


Explanation :

Not to fear what ought to be feared,
is folly, it is the work of the wise
to fear what should be feared.


Transliteration :

"Anjiva thanjaamai pedhaimai Anjuvadhu
Anjal Arivaar Thozhil"






Comments

Popular Posts