இறைகாக்கும் வையகம் எல்லாம்.....


இறைகாக்கும் வையகம் எல்லாம்.....


இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் "

                     குறள்: 547

இறை - வேந்தன், நல்லது
காக்கும்- காப்பாற்றும்
வையகம் - உலகம்
எல்லாம் - அனைத்தும்
அவனை - அந்த நபரை
முறை - நீதி
காக்கும் - காப்பாற்றும்
முட்டா- வழுவாமல்
செயின் - செய்தால்


அரசன் நீதி வழுவாமல் ஆட்சி 
செய்வானானால் அவனுடைய அரசை 
அவன் செய்யும்
நீதியே முன்வந்து காப்பாற்றி நிற்கும்.


விளக்கம்:

நாட்டு மக்களை எல்லாம் காப்பாற்றுபவன்
அரசன்.அவனுடைய ஆட்சி
 நீதி வழுவாத
ஆட்சியாக இருக்க வேண்டும்.
உயர்வு தாழ்வு பாராட்டாத நற்பண்பு
கொண்ட ஆட்சியாக இருக்க 
வேண்டும்.
துன்பம் கண்டவிடத்து ஓடிச் சென்று
துயர் துடைக்கும் நற்பண்பு
ஆட்சியாளனிடம் இருக்க வேண்டும்.
செங்கோல் முறைதவறாது
ஆட்சி நடைபெற வேண்டும்.

இத்தனை பண்புகளோடு ஆட்சி நடத்தும்
ஆட்சியாளனை காப்பாற்ற
வேறு யாரும் வர வேண்டியதில்லை.
அவன் செய்த நல்லாட்சியே
அவனைக் காப்பாற்றும்.
நீதி தவறாது ஆட்சி செய்யும்போது
பல தடங்கல்கள் வரலாம்.
தடைகளைக் கண்டு
இடைமுறிவு செய்து 
பின்வாங்கிவிடக் கூடாது.

முட்டாச் செயின் என்று கூறியிருப்பதால்
எத்தனை முட்டுக்கட்டைகள் வந்தாலும்
முறை தவறாது ஆட்சி சீராக
நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்குப் பெயர்தான்  நல்லாட்சி.


"நாட்டை அரசு காக்கும்.
அரசுக்கு ஓர்  இடர் வரும் காலத்து
அந்த அரசு செய்த நல்லாட்சியே
துணையாக இருந்து காத்து நிற்கும்"
என்கிறார் வள்ளுவர்.


English couplet :

"The king all the whole realm of earth protects, 
And justice guards the king who right respects"


Explanation :

The king defends the whole world and justice,
when he administered without defect,
defends the king.


Transliteration:

"Iraikaakkum vaiyakam Ellaam Avanai
Muraikaakkum Muttaach cheyin"









Comments