நோவற்க நொந்தது அறியார்க்கு....


 நோவற்க நொந்தது அறியார்க்கு....


"நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து"

                                 குறள் : 877
                                 
நோவற்க - துன்பத்தைச் சொல்லாதிருப்பீராக
நொந்தது - துன்பப்பட்டது,வருந்தியது
அறியார்க்கு- தெரியாதவர்க்கு
மேவற்க-  பொருந்தாதிருப்பீராக
மென்மை - வலியின்மை
பகைவர்- எதிரிகள்
அகத்து- உணரும்படியாக


துன்பம் அறியா நண்பர்களிடம் 
துன்பத்தைப்பற்றிச்
சொல்லக்கூடாது. நம் பலவீனத்தைப்
பகைவர் உணரும்படி 
நடந்து கொள்ளக்கூடாது.


விளக்கம் :

துன்பத்தைப் பற்றி அறியாதவனிடம்
நம் துன்பத்தைப் பற்றிப் பேசினால்
அவனுக்கு அந்தத் துன்பத்தின்
வலியைப் புரிந்து கொள்ள முடியாது.
பசியே அறியாதவனிடம் பசியைப்
பற்றிப் பேசினால் பசியின் கொடுமையை
அவனால் எப்படி புரிந்துகொள்ள முடியும்?
பட்டவனுக்குத்தான் தெரியும் நோவும்
அதனால் ஏற்படும் மன உளைச்சலும்
வலியும். 
துன்பம் என்பதைச் சரியாகப்
 புரிந்து கொள்ள தெரியாத
நண்பனிடம் நம் துன்பத்தைப் பகிர்ந்து
கொள்வதால் அவன் என்ன ஆறுதல்
கூறிவிடப் போகிறான்.?
நண்பனாக இருந்தாலும் துன்பத்தைப் பற்றி
அறியாதவனாக இருந்தால் அவனிடம் 
உங்கள் துன்பத்தைப்
பகிர்ந்து கொள்ளாதிருங்கள் என்கிறார்
வள்ளுவர்.
அதுபோல பகைவர் நம் பலவீனத்தை
அறிந்துகொள்ளும்படியாக நடந்து
கொள்ளக்கூடாது.நம் குறைபாடு
ஒருபோதும் பகைவனுக்குத்தெரியக்கூடாது.
அப்படி நம் பலவீனம் பகைவனுக்குத்
தெரிந்துவிடுமானால் அந்தப் 
பலவீனத்தை வைத்தே அவன்
நம்மை மடக்கி விடுவான்.ஜெயித்துவிடுவான்.
அதனால்தான் ஒருபோதும் பகைவர் முன்
உங்கள் பலவீனத்தை உணர வைத்துவிடாதீர்கள்
என்கிறார் வள்ளுவர்.

"உன்னையும் உன் துன்பத்தையும் 
சரியாக புரிந்துகொள்ளாத
நண்பனிடம்  துன்பத்தைப் பற்றி
பேசாதே.
பகைவனிடம் உன்னைவிட நான்
வலிமை குறைந்தவன்தான் என்பதுபோல்
நடந்துகொள்ளாதே "என்கிறார் வள்ளுவர்.

English couplet  :

"To those who know them not, complain not of your woes,
Nor to your foeman's eyes infirmities  disclose "


Explanation : 

Relate not your suffering even to friends who are ignore of it ,
nor refer to your weakness in the presence of your foes.


Transliteration :

Novarka Nondhadhu Ariyaarkku Mevarka 
Menmai pakaivar Akaththu 




Comments

Popular Posts