பொய்மையும் வாய்மை யிடத்த....

பொய்மையும் வாய்மை யிடத்த....


"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் "
                           குறள்  :  292


பொய்மையும் _ பொய்மையும்
வாய்மை  _ உண்மை
இடத்த _ தன்மையுடையது  
 புரை _  குற்றம்
 தீர்ந்த _ நீங்கிய
 நன்மை _ நல்லது
 பயக்கும் _ பயன்தரும்
 எனின் _  என்றால்

குற்றமற்ற நன்மையைத் தருவதாக இருந்தால்
உண்மை சொல்ல வேண்டிய இடங்களில் 
பொய்யும் கூறலாம்.

விளக்கம் : 

பொய் சொல்லவே கூடாது என்று ஒழுக்கங்களை 
வலியுறுத்திச் சொல்லும் வள்ளுவர் பொய்
கூறலாம் என்கிறார்.
தவறான கருத்தாக இருக்கிறதே என்று
தோன்றலாம்.

"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்"
என்று வாய்மைக்கு இலக்கணம் வகுத்துத்
தந்த வள்ளுவர் அடுத்த குறளிலேயே
பொய்மையும் வாய்மையிடத்த என்று
கூறிவிட்டார்.

இதற்கு என்ன காரணமாக இருக்கும் ? 
வள்ளுவர் புரட்டி புரட்டிப் பேசுபவர் அல்லர்.
விதிக்கு  விதிவிலக்காக
இந்தக் குறளைக் கூறி இருப்பாரோ என்று
முற்றிலும் அப்படியே ஏற்றுக் கொண்டுவிட
முடியாது.

பொய்மையும் வாய்மையாகுமாம்.
எப்போது என்று கேட்கிறீர்களா...
அதற்குத் தாங்க புரைதீர்ந்த என்ற 
ஒரு சரியான சொல்லைக் கையாண்டுள்ளார்
வள்ளுவர்.
 
 அது என்ன புரை தீர்ந்த என்கிறீர்களா? 
 குற்றமே இல்லாத ஒரு நன்மையைத்
 தருமானால் பொய் சொல்வதில் தப்பே 
 இல்லங்க...என்பதுதான் அதன் பொருள்.
 
ஆஹா...வள்ளுவர் அனுமதி வழங்கி விட்டார்
என்று தவறுதலான புரிதலோடு பொய் சொல்லி
விடாதீர்கள்.
உங்களின் ஒரு பொய்யால் குற்றமற்ற நன்மை 
நிகழ வேண்டும்.
இதைமட்டும் அப்படியே மனதில் பதிய வைத்துக்
கொள்ளுங்கள்.

உள்ளதை உள்ளவாறே கூறினால் சில நேரங்களில்
நல்லவர்களுக்குக்கூட தீங்கு நிகழ வாய்ப்பு
உண்டு.
அத்தகைய தீங்கிலிருந்து ஒருவரைக்
காப்பாற்ற பொய் சொல்லுங்கள்...
வள்ளுவர் கூறும் நிபந்தனைகளுக்கு
ஒத்துக்கொண்டு...

பொய்யினால் தூய நன்மை நிகழுமானால்
பொய்யையும் மெய்யாக ஏற்றுக் கொள்ளலாம்.

English couplet : 

"Falsehood may take the place of truthful word
If blessing free from fault it can afford"

Explanation:

Even falsehood has the nature of truth, if  it
confer a benefit that is free from fault.

Transliteration :

"Poimaiyum vaaimai yitaththa puraidheerndha
nanmai payakkum enin "

Comments

  1. வள்ளுவரின் குறள் முரண்பட்டதாக இருந்தாலும் உண்மையும் அதுதானே!

    ReplyDelete

Post a Comment

Popular Posts