எல்லா விளக்கும் விளக்கல்ல....

 எல்லா விளக்கும் விளக்கல்ல....


"எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு "
                            குறள்  : 299

எல்லா - அனைத்து
விளக்கும் - விளக்குகளும்
விளக்கல்ல - ஒளி தருவதல்ல
சான்றோர்க்கு - நற்குணம் பெற்றவவர்களுக்கு
பொய்யா - பொய்யாமையாகிய
விளக்கே - விளக்கு மட்டுமே 
விளக்கு - விளக்காக இருக்கும்

புற இருள் நீக்கும் விளக்குகள் எல்லாம்
விளக்குகள் அல்ல. சான்றோர்க்கு 
அகஇருள் போக்கும் பொய்யாமையாகிய
விளக்கே விளக்காகக்
கருதப்படும்.

விளக்கம் :

இவ்வுலகில்   இருளை அகற்ற  
இயற்கையாக ஒளிதரும் 
கதிரவன் இறைவனால்
படைக்கப்பட்டுள்ளது.

செயற்கையாக பல ஒளிவிளக்குகள்
வண்ண வண்ண நிறங்களில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை ஒளிதரும்
காரணிகளாக கருதப்படுகின்றன.
இவை புற இருளை நீக்குகின்றன.

ஆனால் இவை யாவும் பொய்யாமை 
என்னும் விளக்கின் முன்னர்
 காணாமல் போய்விடும்.

 ஒருவன் உயர்ந்தவன், 
பண்புடையவன் என்று உலகத்தோரால்
அறியப்பட வேண்டுமானால் அவனிடம்
பொய் சொல்லாதிருக்கும் நற்பண்பு
என்னும் விளக்கை அகத்தில் 
ஏற்றி வைத்திருத்தல் வேண்டும்.

ஒருவனுடைய உள்ளத்தில் பொய்யாமை
என்னும் நற்பண்பு குடிகொண்டுவிட்டால்
அது அவனை உலகம்
காணும்படியான உயர்ந்த நிலைக்கு
கொண்டு சேர்க்கும்.

பொய்யாமை என்னும் நற்பண்பு
ஒருவனிடம் இருக்குமானால் அவனை 
உலகத்திற்குக் காட்ட வேறு எந்த
ஒளிகளும் தேவை இல்லை.
 பொய்யாமை என்னும் பண்பு 
உலகத்திற்கு அவன் யார் என்பதை
வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.

ஆதலால் பொய்யாமையே சான்றோருக்கு
சிறந்த விளக்காக கருதப்படுகிறது
என்கிறார் வள்ளுவர்.

சான்றோர் என்று சொல்லுவோமானால்
அவரிடம் பொய் சொல்லாமை என்னும்
அறம் இருக்க வேண்டும்.
அதுதான் அக இருளைப் போக்க
வல்ல ஒளி.

English couplet :

"Every lamp is not a lamp in wise men's  sight,
That the lamp with truth's pure radiance  bright"

Explanation :

All lamp of nature are not lamps.
The lamp of truth is  the lamp of the wise.

Transliteration :

"Ella vilakkum vilakkalla saandrorkkup
poiyaa vilakke vilakku "

Comments

Popular Posts