நோய்நாடி நோய்முதல்நாடி.....
நோய்நாடி நோய்முதல் நாடி....
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் "
குறள் : 948
நோய் - பிணி
நாடி - இன்னது என அறிந்து
நோய்முதல் - நோய்க்கான முதற் காரணம்
நாடி - ஆராய்ந்து
அது - அந்த நோய்
தணிக்கும் - தீர்க்கும்
வாய் - வழி
நாடி - அறிந்து
வாய்ப்ப - தவறாமல், பிழையில்லாமல்
செயல் - செய்க
நோய் இன்னது என்பதை அறிந்து,
அந்த நோய் வரக் காரணம்
யாது என்பதை ஆராய்ந்து
அதனைத் தணிக்கும் வழிகளைப்
பிழை நேர்ந்துவிடாது
உடலுக்கு பொருந்தும்படி செய்வீராக.
விளக்கம் :
முதலாவதாக ஒருவனது உடலில் ஏற்பட்டுள்ள
நோய்க்கான அறிகுறிகளை வைத்து
நோய் இன்னது என்பதைக்
கண்டறிய வேண்டும்.
இரண்டாவதாக இந்த நோய்
வருவதற்கான காரணம் என்ன ?
என்னென்ன காரணிகள் இந்நோய் வருவதற்கு
காரணமாக இருந்திருக்கும் என்பதைப் பற்றி
விரிவாக ஆராய்ந்து அறிய வேண்டும்.
மூன்றாவதாக மருத்துவத்தைத் தொடங்குவதற்கு
முன்னர் ஒருவனுடைய உடலில் இந்த
மருத்துவத்தை ஏற்கும் திறன் உள்ளதா
என்பதைக் கண்டறிய வேண்டும்.
சில மருத்துவத்தைச் சிலருடைய
உடல் ஏற்றுக் கொள்ளாது. அதனால்
ஒவ்வாமை ஏற்பட்டு பிறிதொரு நோய்
ஏற்பட வாய்ப்பு உண்டு .
ஆதலால் அந்த நோயைத் தணிப்பதற்கான
மருத்துவத்தைத் தொடங்கும் முன்னர்
நோயாளியின் உடலைத் தீர ஆராய்ந்த பின்னரே
மருத்துவத்தைத் தொடங்க வேண்டும்
என்கிறார் வள்ளுவர்.
வாய்ப்பச் செயல் என்று கூறியுள்ளதால்
மருத்துவம் பார்க்கும்போது எந்தவிதத்
தவறும் நிகழ்ந்துவிடாது கவனமாக
இருக்க வேண்டும். சிறிய கவனக்குறைவும்கூட
பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும்.
ஆதலால் அதிக கவனம் வேண்டும் என்று
ஒரு மருத்துவருக்குக் கூறும்
அறிவுரையாகவே இப்பாடல் அமைந்துள்ளது.
"நோய் என்ன ?
நோய்வருவதற்கான காரணம் யாது?
நோயைத் தீர்க்கும் வழிமுறைகள் யாவை?
என்பவற்றை நன்கு ஆராய்ந்து எந்தத் தவறும்
நிகழ்ந்து விடாதபடி மருத்துவம் செய்க"
என்கிறார் வள்ளுவர்.
English couplet :
"Disease, its cause, what may abate the ill; Let leech
examine these , then use his skill "
Explanation :
Let the physician enquire into the nature of the disease,
its cause and its method of cure and treat it faithfully
according to medical rule.
Transliteration :
"Noinaati Noimudhal Naati Adhudhanikkum
Vaainaati Vaaippach cheyal "
a very simple explanation tr
ReplyDelete