பொய்யாமை பொய்யாமை ஆற்றின்...

 பொய்யாமை பொய்யாமை ஆற்றின்....



"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று "
                       குறள்: 297


பொய்யாமை - பொய் கூறாதிருத்தல்
பொய்யாமை - தவறாமல்
ஆற்றின் - கடைபிடித்து ஒழுகினால்
அறம் பிற-  பிற அறச்செயல்களை
செய்யாமை -செய்யாதிருத்தல்
செய்யாமை-செய்யாதிருத்தல்
நன்று - நல்லது

பொய் கூறாதிருத்தலை ஒருவன்  தொடர்ந்து
கடைபிடித்து ஒழுகினால் பிற அறச்செயல்கள்
செய்யாதிருப்பினும் அந்தப் பொய்யாமை
அவனுக்கு நன்மையையே தரும் .

விளக்கம்

பொய் சொல்லாதிருந்தாலே போதும்.
வேறு எதுவும் செய்ய தேவையில்லை.
பொய் மட்டும்தான் எல்லா தீங்குகளுக்கும்
அடிப்படை காரணம்.
பொய் சொல்கிறவனிடம் மற்ற எல்லா
தீய குணங்களும் வந்து ஒட்டிக் கொள்ளும்.
ஒரு பொய்யை மறைக்க களவு, கொலை,
கொள்ளை என்று என்னென்ன
தீய செயல்களை எல்லாம் செய்வதாக
கேள்விப்பட்டிருக்கிறோம்.
பொய் சொல்லாதிருப்பதை
மட்டும் ஒரு ஒழுக்கமாகக் கடைபிடித்து
வந்தாலே போதும்.
வேறு அறச் செயல்கள் செய்ய
வேண்டிய தேவையில்லை.

பொய் சொல்லாமல்
ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்கள்
செய்யாவிட்டாலும் அதனால் கேடு ஏதும்
வந்துவிடப் போவதில்லை.
வாய்மையே வெல்லும் என்று
இதனால்தான் சொல்லியிருக்கிறார்கள்.
வாய்மையை வாழ்க்கையின்
ஒழுக்க நெறிகளுள் ஒன்றாக 
கடைபிடியுங்கள். பிற அறங்களுக்குக்
கிடைக்கும் எல்லா நன்மையையும்
பெற்றுக் கொள்ளலாம் என்பது
வள்ளுவர் கருத்து.

பொய்யாமை பொய்யாமை என்று
இரண்டுமுறை வள்ளுவர் கூறியிருப்பதால்
பொய்யாமை மிகச் சிறந்த அறம்
என்பதை அழுத்தம் திருத்தமாக
நமக்கு  உணர்த்துவதற்காகவே
என்பது இங்கு நோக்கத்தக்கது.


English couplet :

"  If all your life be utter truth , the truth alone, 'Tis well
  though other virtuous acts be left alone"

Explanation :

 If one speaks the truth and only truth, he
 need not seek other virtues.
 
Transliteration:

"Poiyaamai poiyaamai aatrin arampira
Seyyaamai seyyaamai nandru "

               

               

Comments

Popular Posts