செந்தமிழ் நாடெனும் போதினிலே...

 செந்தமிழ் நாடெனும் போதினிலே....


செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

தந்தானே தந்தானே 
தந்தானே தந்தானே
 தந்தானே தந்தானே
தந்தானா
தந்தானே தந்தானே 
தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே
தந்தானா
     
                               -   செந்தமிழ்

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்  இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே
தந்தானே தந்தானை
தந்தானா
தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே
தந்தானா
                              -       செந்தமிழ்

காவிரி தென்பெண்ணை பாலாறு -தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் -திரு
மேனி செழித்த தமிழ்நாடு

தந்தானே தந்தானே 
தந்தானே தந்தானே
 தந்தானே தந்தானே
தந்தானா
தந்தானே தந்தானே 
தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே
தந்தானா
                         -செந்தமிழ்

நீலத் திரைகடலோரத்திலே -நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

தந்தானே தந்தானே 
தந்தானே தந்தானே
 தந்தானே தந்தானே
தந்தானா
தந்தானே தந்தானே 
தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே
தந்தானா
                          -செந்தமிழ்

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

தந்தானே தந்தானே 
தந்தானே தந்தானே
 தந்தானே தந்தானே
தந்தானா
தந்தானே தந்தானே 
தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே
தந்தானா
                          - செந்தமிழ்
                          
வள்ளுவன் தன்னை உலகினுக்கே  தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு -நெஞ்சை
அள்ளும்சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

தந்தானே தந்தானே 
தந்தானே தந்தானே
 தந்தானே தந்தானே
தந்தானா
தந்தானே தந்தானே 
தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே
தந்தானா
                             - செந்தமிழ்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின்
இந்தப் பாடலை
பள்ளியில் இசையோடு படித்து மகிழலாம்.
கோலாட்டப் பாடலாக  பாட
உகந்த பாடல்.


Comments

Popular Posts