எனைத்தானும் நல்லவை கேட்க....
எனைத்தானும் நல்லவை கேட்க....
"எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் "
குறள் : 416
எனைத்தானும் - எவ்வளவாயினும்
நல்லவை - நல்லவற்றை
கேட்க - கேட்பீராக
அனைத்தானும் - அவ்வளவாயினும்
ஆன்ற - நிறைந்த
பெருமை - உயர்வு
தரும் - கொடுக்கும்
எவ்வளவாயினும் நல்லவற்றைக்
கேட்பீராக.கேட்ட சொற்களின்
அளவு குறைவாக இருப்பினும்
அவை நிறைந்த பெருமையைத்
தரும்.
விளக்கம் :
கேட்பதற்கு எப்போதும் காதுகள்
திறந்தே இருக்க வேண்டும்.
அதுவும் நல்லவற்றைக் கேட்பதற்கு
மட்டுமாகவே இருக்க வேண்டும்.
நாளும் குறைவான சொற்களையாவது
கேளுங்கள் .
நம் காதுகளில் விதைக்கப்பட்ட
விதை மனமென்னும் நிலத்தில்
துளிர்த்து சிந்தனை என்னும்
கிளைகளை விரித்து ஏற்றகாலத்தில்
அதற்கான பலனைக் கொடுப்பது
நிச்சயம்.
கேட்கும் எந்த வார்த்தையும் வீணாகப்
போவதில்லை. சொற்கள் உள்ளுக்குள்
இருந்து நம்மை உறங்கவிடாமல்
உந்தித் தள்ளும். நம்மோடு பேசும்
தக்க நேரத்தில் உரிய
ஆலோசனையை வழங்கும்.
உற்ற நேரத்தில் கற்ற கல்வி
கை கொடுப்பதுபோல கேட்ட
சொற்களும் கை கொடுத்து
வழி நடத்தும்.நன்மை தீமை அறிந்து
ஒழுகும் பாங்கினைச் சொல்லித் தரும்.
எனைத்தானும் நல்லவை கேட்க
என்று சொல்லப்பட்டுள்ளதால்
கேட்கும் சொற்கள் எத்தனை என்பது
ஒரு பொருட்டே அல்ல. சொற்களின்
தரம்தான் உயர்ந்ததாக
நன்மை தருவனவாக
இருக்க வேண்டும் என்கிறார்
வள்ளுவர்.
கேளுங்கள்.நல்லவற்றை
மட்டுமே கேளுங்கள்.
நல்ல சொற்கள் நம்மை நல்வழி
படுத்தி நல்லுயரத்தை அடைய
வைக்கும் .
English couplet :
"Let each man good things learn, for e'en as
he shall learn
he gains increase of perfect dignity"
Explanation :
"Lend ear to good words however few that will
Highly exalt you "
Transliteration :
"Enaiththaanum nallavai ketka Anaiththaanum
Aandra perumai Tharum"
Comments
Post a Comment