வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு...
வேண்டுதல் வேண்டாமை இலானடி....
"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல "
குறள் : 4
வேண்டுதல் - விரும்புதல்
வேண்டாமை - வெறுத்தல்
இலான் - இல்லாதவன்
அடி - தாள் , பாதம்
சேர்ந்தார்க்கு - தஞ்சமடைந்தவர்க்கு
யாண்டும் - எக்காலத்தும்
இடும்பை - துன்பம்
இல - இல்லை
விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனது
பாதத்தைத் தஞ்சமடைந்தவர்க்கு
எக்காலத்திலும் துன்பம் நேர்வதில்லை.
விளக்கம் :
இவர் எனக்கு வேண்டப்பட்டவர்.
அவர் எனக்கு வேண்டாதவர்.
இவரை எனக்குப் பிடிக்கும்.
இவர் எனக்குப் பிடிக்காதவர்
என்று யார்மீதும் தனிப்பட்ட
விருப்பு வெறுப்பு கொள்ளாதவன்
இறைவன்.
இறைவனது பார்வையில்
அவன் படைப்புகள் அனைத்தும் சமம்.
அப்படிப்பட்ட இறைவனின் பாதத்தைத்
தஞ்சம் அடைந்தவர்க்கு ஒரு போதும்
துன்பம் நேர்வதில்லை.
இறைவன் விருப்பு வெறுப்பு
இல்லாதவன் ஆதலால்
நாமும் அப்படிப்பட்ட விருப்பு வெறுப்பு
அற்ற மனநிலையோடு இறைவனைத்
தேடும்போது எவ்விடத்தும் எக்காலத்திலும்
துன்பம் நிகழ்ந்துவிடாதபடி
இறைவன் நம்மைக் காத்துக் கொள்வார்.
கெட்டவன் அடையும் ஆக்கமும்
நல்லவன் உறும் கேடும் ஏன்
என்று நமக்குப் புரியவில்லை என்பதற்காக
இறைவன் நடுநிலையில்
இல்லை என்று ஒருபோதும் தவறுதலாகப்
புரிந்து கொள்ளுதல் கூடாது.
காய்தல் உவத்தல் அற்றவன் இறைவன்.
தூய சிந்தையோடு இறைவனை
விடாப்பிடியாக அண்டிக்
கொள்பவர்க்கு இறைவன் ஒருநாளும்
கேடு நிகழ விடுவதில்லை.
அதனால்தான் பற்றுக பற்றற்றான்
பற்றினை என்று இறைவனை
விடாப்பிடியாக பற்றிக்கொள்க
என்று பரிந்துரை வழங்குகிறார்
வள்ளுவர்.
விருப்பும் வெறுப்புமற்ற இறைவனைத்
தூய சிந்தையோடு தொடர்ந்து
தொழுது வருபவர்க்கு
எவ்விடத்தும் எப்போதும் துன்பம்
நிகழப் போவதில்லை.
.English couplet :
"His foot, Whom want affects not , irks not grief
who gain shall not , through every time, of
any woes compain"
Explanation:
To those who meditate the feet of Him
who is void of desire or aversion, evil shall
never come.
Transliteration :
"Ventudhal ventaamai illaanati serndharkku
Yaantum idumpai ila "
வேண்டுதல் வேண்டாமை குறள் விளக்கம் மிக அருமை.
ReplyDeleteSuperb explanation of the kural. Weldone madam.
ReplyDelete