மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்....

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்.....



"மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் "

                       குறள்  :    52

மனை - இல்லம்
மாட்சி - நற்பண்பு
இல்லாள்கண் - இல்லத்தரசியினிடத்து
இல்லாயின் - இல்லாதிருந்தால்
வாழ்க்கை - வாழ்தல்
எனை - எவ்வளவு பெரிய
மாட்சித்து- பெருமையுடைத்து
ஆயினும் - ஆனாலும்
இல் -  பயன் இல்லை.

இல்வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற
நற்பண்பு இல்லத்தரசியிடம் இல்லாதிருந்தால்
வேறு எவ்வளவு சிறப்பு இருப்பினும்
அதனால் ஒரு பயனும் இல்லை.


விளக்கம் : 

இல்லறம் நடத்த உகந்த நற்பண்பு
உள்ளவளாக மனைவி இருத்தல் வேண்டும்.
நற்குண நற்செய்கை உள்ள
மனைவியால் மட்டுமே குடும்பத்திற்கு
பெருமையும் சிறப்பும் உண்டு.
மனைவி ஒழுக்கம் உடையவளாக
இருத்தல் வேண்டும்.
செல்வம் இருக்கலாம். பதவி இருக்கலாம்.
சமுதாயத்தில் உயர்நிலையில் இருக்கலாம்.
ஆனால் மனைவி மட்டும் ஒழுக்கம்
தவறியவளாக நற்பண்பில்லாதவளாக
வாய்க்கப் பெற்றுவிட்டால் வேறு
என்ன இருப்பினும் பயன் இல்லை.
ஒருவனுக்கு சிறப்பு என்பது
நற்குணங்கள் மிக்க அவன் மனைவியால்
மட்டுமே கிடைப்பதாக இருக்கும்.மற்ற 
சிறப்பு எதுவும் சிறப்பாகக் கருதப்பட
மாட்டா என்கிறார் வள்ளுவர்.


English couplet:

"If household excellence be wanting in the wife,
Howe'er with splendour lived, all worthless is the life"

Explanation :

 If the wife lacks household excellence, all
 other excellence in life comes to nil.
 
 Translation :

"Manaimaatchi Illaalkan Illaayin vaazhkkai
Enaimaatchith Thaayinum Il "





Comments

Popular Posts