கோவூர்கிழார்

கோவூர் கிழார் 


மன்னனைவிட மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக அக்கால புலவர்கள் இருந்திருக்கிறார்கள்.


மன்னன் புகழ் பாடி பரிசில் பெற்றுச் செல்வது மட்டும்  தங்கள் நோக்கம்  அல்ல.

மன்னன் தவறு செய்யும்போது இடித்துரைப்பதும்

அவர்களை நல்வழிப்படுத்துவதையும் தங்கள் கடமையாக கொண்டிருந்தனர்.

அதியமான்  ஔவை நட்பு போலவே நலங்கிள்ளிக்கும் கோவூர் கிழார் என்னும் புலவருக்கும் நல்ல  நட்பு உண்டு.

மன்னன் துவண்டு நிற்கும் போதெல்லாம் வந்து நின்று அறிவுரை வழங்குவார்.

ஆறுதல் படுத்துவார்.

ஒருமுறை  மன்னன் நெடுங்கிள்ளி 

ஆவூர் கோட்டைக்குள்   இருந்தபோது நலங்கிள்ளியின் தம்பியான மாவளத்தான்   ஆவுரை முற்றுகை இட வருகிறார்.நெடுங்கிள்ளி தன்னுடைய கோட்டையை அடைத்துக் கொண்டு கோட்டைக்குள்ளேயே இருக்கிறார்.

மக்களைக் காக்க  வேண்டிய தன் பொறுப்பை மறந்து கோட்டைக்குள் மன்னன் இருந்துவிட்டார் .

மக்களைக் காப்பது யார்?

மக்கள் உண்ண உணவும் குடிக்க நீருமின்றி பட்டினி கிடக்கின்றனரே இதற்கு யார் பொறுப்பு?


இதைக் கேள்விப்பட்ட கோவூர் கிழார்

 மிகவும் வருந்தினார்.

என்ன இது?

குடி காக்கும் மன்னன் செயலா இது?

போரிட மனமில்லை என்றால்

சரணடைந்து விட வேண்டியதுதானே!

தான் மட்டும் பாதுகாப்பாக கோட்டைக்குள்

இருப்பது என்ன அறமாகும்?


நெடுங்கிள்ளியைக் கண்டு பேச வேண்டும்.

இது மன்னனுக்கு  அழகா என்று

கேட்க வேண்டும் என்று 

கோபத்தோடு வருகிறார். நெடுங்கிள்ளியைப் பார்த்ததும் உள்ளம் குமுறுகிறார்.

உன்னுடைய பட்டத்து யானைக்கு

 குளிக்க நீரில்லை.

 உண்பதற்கு ஒரு  கவள உணவில்லை.  மிகுந்த சோர்வுடன் படுத்துக் கிடக்கிறது.

நாட்டிலுள்ள குழந்தைகள் எல்லாம் பால் இல்லாமல் அழுது கொண்டிருக்கின்றனர்.

பெண்கள் தலையில் பூக்கள் 

சூட முடியாமல்   வருந்திக் கிடக்கின்றனர்.

 தண்ணீர் கிடைக்காமல்

தாகத்தால் நா வறண்டு மக்கள் அழுது கொண்டிருக்கின்றனர்.

மக்களைக் காக்க வேண்டிய மன்னன் நீ

கோட்டையை மூடிக்கொண்டு உள்ளே இருக்கின்றாய்.


ஏன் இந்த அச்சம்?

யாரும் நெருங்க முடியாத சிங்கத்தைப் போன்றவன் நீ. 

உன்னை எதிர்த்து போரிட்டு வெற்றிபெற

யாராலும் கூடாது.

போர் வேண்டாம் என்று  அறவழியை விரும்பினால் 

கோட்டை அவனுடையது என்று கூறி திறந்துவிட்டுவிட்டு சரணடைந்து விடு.

இல்லை மறவழியை விரும்பினால் போர் செய்வதற்காக கோட்டையை திறந்து விடு. இப்படி இரண்டும் செய்யாமல் கோட்டைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது

வீரமுள்ள மன்னனுக்கு  அழகல்ல.இது

வெட்கப்பட வேண்டிய செயல் 

என்றுதான் கூறுவேன்."என்கிறார் .

ன்னனை இடித்துரைத்து கோவூர் கிழார் பாடிய பாடல் இதோ உங்களுக்காக...


இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா,

நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ,

திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி,

நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து,

அலமரல் யானை உருமென முழங்கவும்,

பாலில் குழவி அலறவும், மகளிர்

பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்

வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்,

இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;

துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்!

அறவை யாயின்,நினது எனத் திறத்தல்!

மறவை யாயின், போரொடு திறத்தல்;

அறவையும் மறவையும் அல்லை யாகத்,

திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்

நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்

நாணுத்தக வுடைத்திது காணுங் காலே - புறநானூறு 44


நல்ல அறிவுரை.


மற்றொரு முறை

சோழன் குளமுற்றத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமானைப் போரில் வீழ்த்திவிட்டான்.

அவன் பிள்ளைகளையும் சிறைப்பிடித்துக் கொண்டான்.

அத்தோடு விட்டுவிடவில்லை.

மலையமானின் பிள்ளைகளை தன்னுடைய யானையின் காலால் இடரச் செய்து

கொல்ல ஆணையிட்டான். 

அதனை அறிந்த கோவூர் கிழார் 

ஓடோடி வந்தார். 


மன்னா! 

புறாவினுடைய துன்பத்தைப் போக்கிய சிபிச் சக்கரவர்த்தியின் வழிவந்தவன் நீ . இந்தக் குழந்தைகளோ உழவர்களின் துன்பத்தைக் கண்டு அஞ்சி தன்னிடம் இருந்த உணவினை பகிர்ந்து கொடுத்த நற்பண்பு கொண்ட மலையைமானின் பிள்ளைகள். 

தங்களுடைய அப்பா அருகில் இல்லாததை நினைத்து அழுது கொண்டிருந்தனர்.

அப்படி இருந்தும் உன்னுடைய யானையைப்  பார்த்ததும் அதன் அழகில் மயங்கி அழுவதை கூட நிறுத்திவிட்டார்கள். ஆனால் இந்த மன்றத்தில் இருக்கும் முதியோர்களை பார்த்துதான் அவர்கள் மருண்டு  போய் உள்ளனர். குழந்தைகளைக் கொல்வது போர் அல்ல .

நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டேன் .இனி என்ன செய்ய வேண்டும் என்பதை நீதான் முடிவு எடுக்க வேண்டும் "என்றார் கோவூர் கிழார் .


கிள்ளிவளவன் கோவூர் கிழார் 

கூறியதைக் கேட்டதும் உடனடியாக தண்டனையை நிறுத்தும்படி

ஆணையிட்டார். அந்தக் குழந்தைகள்

மரண தண்டனையிலிருந்து 

கோவூர்கிழாரால் காப்பாற்றப்பட்டனர்.


கோவூர்கிழார் கிள்ளிவளவனிடம்

மலையமானின் குழைந்தைகளுக்காக

வேண்டி நின்ற பாடல் இதோஉங்களுக்காக...

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;

களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி,
விருந்தின் புன்கண் நோவுடையர்;
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே!

புறநானூறு 

பாடல் 46


 புலவர்களுக்கு  எந்த மன்னர்களிடமும்

அச்சமில்லை.

நேர்மை உண்மை  இதுதான் அவர்களுக்கான அறம்.

பொருளுக்காக எந்த இடத்திலும் தங்கள் நேர்மையிலிருந்து கீழிறங்கி வருவதில்லை.


மன்னா! திருந்து .

அல்லது திருத்தப்படுவாய் என்று

மக்கள் பக்கம் நின்று குரல் கொடுப்பவர்கள் புவவர்கள்.மன்னர்களும் புலவர்களை மதித்து அவர்களுடன் நல்ல 

உறவினைப் பேணி வந்திருக்கின்றனர்.

என்பது இதன்மூலம் தெரிகிறது.





















 தங்களைப் போன்ற மற்றொரு புலவருக்கு ஒரு இன்னல் ஏற்படும்போது தாமாகவே முன்வந்து

Comments