சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்


பேச்சுத் துணைக்கு வருவதல்ல நட்பு.

பிறர் பேசாது நம்மைப்

பார்த்துக் கொள்வதுதான்

உயர்ந்த நட்பு.

துன்பம் வந்த காலத்து

தொலைந்து போகும் நட்பு 

நட்புல்ல.


சிலர் வலியவலிய வந்து

நம்மோடு உறவு கொண்டிட நினைப்பர்.

நாமும் எவ்வளவு நல்லவர்களாக

இருக்கிறார்கள் என்று நம்பிவிடுவோம்.

அந்த நம்பிக்கையில் மனதில் இருக்கும்

கவலைகளை எல்லாம்

சொல்லிவிடுவோம்.

வீட்டு நிலவரத்தை விலாவாரியாக

சொல்லி வைப்போம்.

இது ஒருநாள் துன்பத்தில்

வந்து முடியும்.


நமக்கு ஏதாவது துன்பம் வந்தபோது

அந்த நட்பு காணாமல் போய்விடும்.

அல்லது நான் அப்பவே நினைத்தேன்

என்று முதுகின் குச் பின்னால்

தவறான முத்திரை பதிவு

செய்துக்கொண்டு திரியும்.


பெரும்பாலான நட்புகள்

 இப்படித்தான் இருக்கின்றன.

 யாரும் நெருங்கிப் பழகிவிட்டால்

 அவர்களை நண்பர்கள் என்று

 எண்ணிவிடாதீர்கள்.

நட்புக்கான நற்பண்பு இல்லையா

அவர் நண்பராக ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

பாலுக்கு என்று இயல்பாகவே

ஒரு சுவை உண்டு.

அது எவ்வளவு காய்ச்சி வற்றிப்போனாலும்

அதன் சுவை கூடுமே தவிர

குறைவு படாது.

அதுதான் பாலின் இயல்பு.

அதுபோல நெருக்கடி நேரத்திலும்

நட்பின் நற்பண்பு சிறிதும் குறைவும் யாது

இருப்பதுதான் நல்ல நட்புக்கு அழகு.



இதை நான் சொல்லவில்லை.

ஔவை சொல்கிறார்.

இன்னொன்றும் சொல்கிறார்

கேளுங்கள்.


சங்கின் நிறம் வெண்மை.

 சுடச்சுட  அதன் வெண்மை

 நிறத்தில் எந்த கரும்பள்ளிகளோ

 மாறுபாடுகளோ தென்படுவதில்லை. 

அதுதான் சங்கின் இயல்பு.

அதுபோல எவ்வளவுதான் 

துன்பப்பட்டு,துயரப் பட்டு,

அடிபட்டு வாழ்க்கையில்

நொந்து போனாலும் ஒழுக்கத்தில் சிறந்த

மேன்மக்கள் தங்கள் உயர்ந்த

பண்பிலிருந்து ஒருபோதும் கீழிறங்கி

வருவதில்லையாம்.



இதைத்தான் ஔவை மூதுரையில்,



அட்டாலும் பால் சுவையில் குன்றாது

அளவளாய்

நட்டாலும் நண்பரல்லார் நண்பரல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே 

சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்


            மூதுரை பாடல் -4



பாலினை  சுண்டக்

காய்ச்சினால் அதன் சுவை கூடுமே தவிர

குறையாது.

ஆனால் எவ்வளவுதான் நெருங்கி

நெருங்கி உறவாடினாலும் 

நட்பின் உயர் பண்பு  அறியாதவர் 

நண்பர் அல்லர்.

சங்கு சுடச்சுட 

வெண்மை மட்டுமே தரும்.

சுட்டத்தினால் தன் தன்மையிலிருந்து

அது  மாறுபடாது.

அதுபோல ஒழுக்கத்தில் சிறந்த

மேன்மக்கள் எவ்வளவு துன்பம்

வந்தாலும் தன் உயர்ந்த 

தன்மையிலிருந்து

மாறுபட்டு நிற்க மாட்டார்.


அருமையான கருத்து இல்லையா?

Comments