எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
நீதி நூல்கள் வரிசையில் முதலாவது வைத்துக்
கொண்டாடிக் கொண்டிருக்கும் நூல்களுள் ஒன்று
வெற்றி வேற்கை.
ஆத்திசூடி போன்றே
பள்ளிப் பருவத்தில் நாம் மனப்பாடம்
செய்த பாடல் வரிகள் இன்றும்
நம்மோடு நடைபயின்று கொண்டிருக்கிறது.
வெற்றி வேற்கைக்கு நறுந்தொகை என்று
மற்றுமொரு ஒரு பெயரும் உண்டு.
அதிவீரராம பாண்டியன் இயற்றிய
வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகையில்
எண்பத்து இரண்டு பாடல்கள்
உள்ளன.
அவற்றுள் முதல் முப்பது பாடல் வரிகள்
உங்களுக்காக...
1. எழுத்து அறிவித்தவன்
இறைவன் ஆகும்.
கல்வி கற்பித்த ஆசிரியர் இறைவனாகக்
கருதப்படுவார்.
2...கல்விக்கு அழகு
கசடற மொழிதல்
கல்விக்கு அழகாவது யாதெனில்
கற்ற கல்வியைக்
பிழை இல்லாது சொல்லுதல் ஆகும்.
3. செல்வர்க்கு அழகு
செழுங்கிளை தாங்குதல்
மிகுந்த செல்வம் உடையவர்களுக்கு
அழகாவது
தமது சுற்றத்தினரைத்
தாங்கி அரவணைத்து
வழிநடத்துதலாகும்.
4.வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
வேதம் ஓதும் அந்தணர்க்கு அழகாவது
வேதத்தை நன்கு அறிந்திருப்பதும்
அதன்படி ஒழுகுதலுமாகும்.
5. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை
மன்னனுக்கு அழகு எனப்படுவது
யாதெனில் செங்கோல் முறை தவறாது
ஆட்சி செய்வதாகும்.
6.வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்
வணிகர்க்கு அழகு எனப்படுவதாவது
தம் வாணிபம் என்றும் பெருகிக்
கொண்டிருக்கும்படி பொருளீட்டுதலேயாகும்.
7. உழவர்க்கு அழகு ஏர் உழுது ஊண் விருப்பல்
உழவர்களுக்கு அழகாகக் கருதப்படுவது
உழவுத் தொழில் செய்து அதிலிருந்து
கிடைக்கும் தானியத்தை வைத்து
உண்பதாகும்.
8. தந்திரிக்கு அழகு தருங்கண் ஆண்மை
அழகு
9. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
உணவுக்கு அழகு விருந்தினரோடு சேர்ந்து
உணவு உண்ணுதலாகும்.
10. பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல்
பெண்களுக்கு அழகு எதிர்த்து எதிர்த்துப்
பேசாதிருத்தலாகும்.
11. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்
நல்ல குலமகளுக்கு அழகு யாதெனில்
தன் கணவனைப்
பேணுதலாகும்.
12. விலை மகட்கு அழகு
தன் மேனி மினுக்குதல்
விலை மகளுக்கு அழகு
என்று சொல்லப்படுவது
யாதெனில் தன் உடம்பை
மினுமினுப்போடு பகட்டாக
வைத்துக் கொள்ளுதலாகும்.
13. அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்
அறிஞர்களுக்கு அழகு என்று சொல்லப்படுவது
யாதெனில் நிறைய கற்றிருந்தாலும்
பெருமை பாராட்டாது அடக்கமாக
இருந்ததலாகும்.
14. வறிஞர்க்கு அழகு
வறுமையில் செம்மை
வறுமையில் வாழ்பவர்களுக்கு அழகு
என்று சொல்லப்படுவது யாதெனில்
வறுமையான சூழலிலும்
ஒழுக்கத்துடன் வாழ்த்தலாகும்.
16: "தேம்படு பனையின்
திரள்பழதீ தொருவிதை
வானூற வோங்கி
வளம்பெற வளரினும்
ஒருவர் கிருக்க நிழலாகாதே"
தேன் போன்ற இனிமையான திரண்ட
விதையிலிருந்து பனைமரம் வானுயர
வளர்ந்தாலும் ஒருவர் இருக்க நிழல்
கொடுக்காது.
17: தெள்ளிய ஆலின்
சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கடத்தும்
சிறுமீன் சினையினும்
நுண்ணியதே ஆயினும்
அண்ணல் யானை
அணிதேர் புரவி
ஆட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலாகும்மே.
ஆலம்பழத்தின் விதை தெளிந்த நீர்
நிறைந்த குளத்தில் கிடக்கும்
சிறிய மீனின் முட்டையை விடவும்
சிறியதாக இருந்தாலும் பெருமைமிகு
யானை,,அணி செய்
தேர்,குதிரை,காலாட்படையோடு
மன்னன் அமர்வதற்கு நிழல் தரும்.
18. பெரியோ ரெல்லாம்
பெரியோரும் அல்லர்.
உருவத்தில் பெரியவராக இருப்பவர்
எல்லாம் பெரியவர்களாக கருதப்பட
மாட்டார்.
19. "சிறியோ ரெல்லாம்
சிறியரு மல்லர்"
உருவத்தில் சிறியதாக இருப்பவரெல்லாம்
சிறியவராக கருதப்பட மாட்டார்.
20. "பெற்றோ ரெல்லாம்
பிள்ளை களல்லர்"
நாம் பெற்ற பிள்ளைகள்
அனைவரும்
பிள்ளைகளாக இருப்பதில்லை.
21. "உற்றோ ரெல்லாம்
உறவின ரல்லர்"
எல்லா உறவினர்கள்
அனைவரும் உண்மையான
உறவினர்களாக இருப்பதில்லை.
22. கொண்டோ ரெல்லாம்
பெண்டிரு மல்லர்
மணம்புரிந்து
கொண்டவர்கள் எல்லாம்
நல்ல மனைவியாக இருப்பதில்லை.
23. "அடினும் ஆவின் பால்
தன்சுவை குன்றாது"
சுண்டக் காய்ச்சினாலும்
பசுவின் பால்
தன்சுவையிலிருந்து
குறையப்போவதில்லை.
24. சுடினும் செம்பொன்
தன்ஒளி கெடாது
நெருப்பிலிட்டுப் புடமிடப்பட்டாலும்
தூய பொன் தன் ஒளியில்
குறைவதில்லை.
25. " அரைக்கினும் சந்தனம்
தன் மணம் அறாது"
நன்றாக கல்லில் வைத்து அரைத்தாலும்
சந்தனத்தின் மணம் குறைந்துவிடப்
போவதில்லை.
26." புகைக்கினும் காரகில்
பொல்லாங்கு கமழாது
அகில் கட்டையை நெருப்பிலிட்டு
எவ்வளவு புகைத்தாலும்
தன் மணம் குறைந்து
துர்மணம் வீசப்போவதில்லை.
27. " கலக்கினும் தண்கடல்
சேறு ஆகாது."
எவ்வளவு கலக்கினாலும் குளிர்ந்த
கடல் நீரானது சேறாக மாறிவிடாது.
28. "அடினும் பால் பெய்து கைப்பு
அறாது பேய்ச் சுரைக்காய்"
சுண்டக் காய்ச்சிய பால் விட்டு
பேய்ச்சுரைக்காய் தயார் செய்தாலும்
அது தன் கசப்புச்
சுவை குறையாது.
29. "ஊட்டினும் பல்விரை
உள்ளி கமழாது"
பலவிதமான வாசனைகளைச்
சேர்த்தாலும்
வெங்காயம் நறுமணம் வீசாது.
30. "பெருமையும் சிறுமையும்
தான்தர வருமே"
நமது நடைத்தையால்தான் நமக்குப்
பெருமையும் சிறுமையும்
வந்து சேரும்.
தொடரும்....
31." சிறியோர் செய்த
சிறு பிழையெல்லாம்
பெரியோராயின் பொறுப்பது
கடனே."
சிறியவர்கள் செய்யும் சிறுசிறு
பிழைகளை எல்லாம் பெரியவர்கள்
பொறுத்துக் கொள்வது
Comments
Post a Comment