நாற்கவி என்றால் என்ன

நாற்கவி என்றால் என்ன

பாடல்கள் எழுதும் புலமையிலுள்ள திறன் வேறுபாடுகளை வைத்து கவி நான்கு வகையாக அடையாளப்படுத்தப்படுகிறது.


1.ஆசுகவி

2.மதுரகவி

3.சித்திரகவி 

4.வித்தாரகவி 


இவை நான்கும் நாற்கவிகள் என அழைக்கப்படுவனவாகும்.


ஆசுகவி :

உடனடியாகக் கவிதை பாடும் திறனுடையவர்கள் ஆசுகவி என்று அழைக்கப்படுகின்றனர்.


ஒருவர் சொல்லும் எழுத்தையோ

சொல்லையோ கருத்தையோ

கேட்டவுடனே கவிதையாகப் பாடும் ஆற்றல் கொண்டவர் ஆசுகவி.

 கவி காளமேகம் 


மதுரகவி :

காதுக்கு இன்பம் தரும் இனிமையான கவிதைகளைப் பாடுபவர்கள் 

மதுரகவி எனப்படுவர்.


மதுரகவி ஆழ்வார் 


சித்திரகவி :

ஓவியங்களின் வடிவங்களுக்கு ஏற்ப கவிதை எழுதுபவர்கள் சித்திரக் கவியாக

அடையாளப்படுத்தப்படுவர்.


திருமங்கையாழ்வார் 

அருணகிரி நாதர்

பாம்பன் சுவாமிகள் 


வித்தாரகவி:


 வக்கணையாகப் பேசும் கவிதை நடையில் நூல் செய்யும் புலமை உடையவர்கள்

வித்தாரகவி எனப்படுவர்.


நாற்கவிராச நம்பி

Comments