நோமென் நெஞ்சே நோமென்

நோமென் நெஞ்சே நோமென் 


உனக்கு வேணும் 

உனக்கு வேணும் 

எத்தனை முறை சொல்லியிருப்பேன் 

நமக்கு இது எல்லாம் வேண்டாம் என்று

கேட்டாயா ?

கேட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா ?

இப்போது அழுது என்ன பயன் ? 

அழு...அழு நன்றாக அழு...

உனக்கெல்லாம் பட்டால்தான் தெரியும்

கோபமாக பேசுகிறாள்

தலைவி இப்படிக் கோபப்படும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்?

யாரைச் பார்த்து இப்படிக் 

கோபப்படுகிறாள் தலைவி ?

அறிய வேண்டும் என்று ஆவலாக இருக்கிறதல்லவா !

வாருங்கள் பார்த்துவிடுவோம்


தன்னை உருகி உருகிக் காதலித்த

காதலன் தனியாக விட்டு விட்டுப் பிரிந்து விட்டான். இன்று வருவான் நாளை வருவான் என்று காத்திருந்து காந்திருந்து ஏமாந்து போனாள்.. அவளுக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. அழுகிறாள். யாரிடம் சொல்ல முடியும் ?


அவள் பேச்சைக் கேட்காமல் 

தலைவன் பின்னாலேயே ஓடிய

நெஞ்சின்மீது கோபம் வருகிறது.

உன்னாலே ..

எல்லாம் உன்னாலே....


நல்லா அழு..... எவ்வளவு கண்ணீர் விட்டு அழுதாலும் வராத காதலர் நமக்கு அமைந்திருக்கிறார்.

அதை நினைத்து நீ நல்லா அழு. எனக்கென்ன  என்று தன் நெஞ்சோடு நொந்து கொள்கிறாள் தலைவி.


பாடல் உங்களுக்காக

நோமென்  னெஞ்சே  நோமென்  னெஞ்சே 

இமைதீய்ப்  பன்ன  கண்ணீர்  தாங்கி 

அமைதற்  கமைந்தநங்  காதலர் 

அமைவில  ராகுத  னாமென்  னெஞ்சே.


- குறுந்தொகை 


சீர் பிரித்துப் படித்துப்பாருங்கள்.

தோழி சொல்ல வந்த கருத்து எளிதில் 

புரியும்.

நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே

இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி

அமைதற்கு அமைந்த நம் காதலர்

அமைவிலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே


"நொந்து கொள் என் நெஞ்சே! 

நன்றாக நொந்து கொள்.

என் நெஞ்சே !

இமைகள் தீய்ந்து போகும் அளவுக்கு

கண்ணீர் தந்த காதலர் 

நமக்கு காதலராக கிடைத்திருக்கிறார்.

அதை நினைத்து நொந்துகொள் என் நெஞ்சே!

நீ நொந்து கொள்...

என்ன அழுதாலும் அவர் வர மாட்டார் 

வரவே மாட்டார்.

நீ அழு ...நன்றாக அழு 

உன்னால் வேறு என்ன செய்ய  முடியும் ?"


எவ்வளவு வலியைக் தந்திருந்தால்

தலைவி இப்படி புலம்பியிருப்பாள்


.இன்று அவள் இல்லை. 

அவன் அந்த கண்ணீர் மட்டும் 

இன்னும் அவளோடு 

மிச்சம் இருக்கிறது.


நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே 

என்று எளிய சொற்களை அடுக்கி

தலைவியோடு சேர்ந்து நம் அனைவர் உள்ளங்களையும் கண்ணீரால் நனைய வைத்துவிட்டார் புலவர்.அள்ளூர் நல்முல்லையார்.






கருத்துகள்

Popular Posts