இடும்பைக்கு இடும்பை படுப்பர்....

இடும்பைக்கு இடும்பை படுப்பர்...


இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஆ தவர் "
                           குறள்  - 613


 இடும்பை  -துன்பத்திற்கு
 இடும்பை  -துன்பம்
 படுப்பர்  -   உண்டாக்குபவர்
 இடும்பைக்கு. -  துன்பத்திற்கு
 இடும்பை. -. துன்பம்
 படாஆதவர்  -உறாதவர்



துன்பம் வந்தபோது துவண்டுபோகாத
மன  உறுதி உள்ளவர்கள் அந்தத் துன்பத்திற்கே
துன்பம் உண்டாக்கி அதனைப்
வென்று விடுவர்.


விளக்கம்:

       எத்தகைய துன்பம் வந்தாலும் அதனைக் கண்டு
 கலங்காத மன உறுதி  உடையவர்களை அத்துன்பம்
 ஒன்றும் செய்துவிடாது.மனம் தளராதவர்கள்
 எந்த இடையூறு வந்தாலும் அதனால் சோர்ந்து
 தனது முயற்சிகளைக் கைவிட்டுவிட்டு 
 செயலற்றவர்களாக இருப்பதில்லை.

இதுதானா என்பது போல மிக எளிதாக
எடுத்துக்கொண்டு அதிலிருந்து கடந்து
போய்விடுவர். இடையூறு செய்ய நினைப்பவர்களே
கலங்கிப்போகும்படியாக  அவர்களுடைய
செயல்பாடுகள் இருக்கும்.
எவ்வளவோ இடையூறுகள் செய்துவிட்டோம்.
அவன் கலங்குவதாகத் தெரியவில்லையே 
என்று இடையூறு செய்தவர்களே அவமானப்பட்டு
விலகி ஓடிவிடுவர்.
மன உறுதி இருந்தால் எந்தத் துன்பமோ 
இடையூறோ எதுவும் உங்களை  ஒன்றும் செய்துவிடப்
போவதில்லை என்கிறார் வள்ளுவர்.

இடும்பை என்பது துன்பம் ,இடையூறு 
என்ற  இரண்டு பொருள்களிலும் கையாளப்பட்டுள்ளது
நோக்கத்தக்கது.
 
 வந்த சொல்லே மறுபடியும் மறுபடியும்
 கையாளப்பட்டுள்ளதால் இந்தக் குறள்
 சொற்பொருள் பின்வரு நிலையணிக்கு
 எடுத்துக்காட்டாக உள்ளது.


 English couplet : 

"Who give confront with meek , ungrieving heart
From them griefs , put to grief depart."


Explanation :

"They give sorrow to sorrow who in sorrow
do not suffer sorrow."

Transliteration : 

" Itumpaikku idumpai patuppar itumpaikku 
Itumpai pataa thavar "

Comments

Popular Posts