பணிநிறைவுப் பாராட்டு மடல்

 பணிநிறைவுப் பாராட்டு மடல்


நாவில் தேனூறும் நல்லமணம் தூதாகும்
ஆம்பூர்நகர் இணையர் ஜேசுதாஸ் ரெபேக்கா
ஆசைமலர்க் கொடியாள் ஹெலன் மீராபாய்
உக்கிரன்கோட்டை ஐயா லயனலின்
                                             வயலினானார்!

ஐயா லயனலுக்குக் கட்டித்தேன் அமுதத்தேன்
மகளிரிருவர் வாய்த்த நல் வசந்தத்தேன்
பெய்தேன் குழைஇல்லறம் இசைத்தேன்
கண்டேன் மெய்த்தேன் இதுவென உவந்தேன்!

 நார்த்விக் மேனிலைப்  பள்ளி துளிர்த்தேன்
 செயினட்மேரி நேசனல் கல்லூரி அருந்தேன்
மும்பைத் தமிழ்ப்பள்ளி தனித்தேன் தளிர்த்தேன்
இன்பத்தேன்  மாணவர் விருப்பும் கூட்டுத்தேன்!


சொற்தேன் தோய்த்த கல்வி சுவைத்தேன்
மதித்தேன் மதி தேனெனென உணர்ந்தேன்
நனித் தேனுண்டதுபோல்  மகிழ்ந்தேன்
கனித்தேன் மொழிகேட்கத் தவம் கிடந்தேன்!

அன்புத்தேன் உள்ளம் என்றும் அமுதத்தேன்
பண்புத்தேன் பாசத்தேன் கொட்டும் அருவித்தேன்
ஆசைத்தேன்  கொண்டேன் நட்பால் அரவணைத்தேன்
பார்த்தேன் பாராட்ட வார்த்தைகளை மறந்தேன்!

சொற்றேன் சுவைத்தேன் பொருட்தேன் அறிந்தேன்
அறிவித்தேன் தமிழ்த்தேன் மழையில் நனைந்தேன்
நட்புத்தேன் நவிலல்தேன் நெஞ்சில் நிலைத்தேன்
நினைத்தேன் நித்தம் நினைவினில் மலைத்தேன்!

பணித்தேன் என்பதை உம்மிடம் படித்தேன்
ஓய்வென்ற ஒற்றைச் சொல்லைச் சபித்தேன்
கண்ணுக்குள் உம் உருவம்  நிறைத்தேன்
இமைப்பதை மறந்தேன் கண்மணிபோல் காத்தேன்!

எஞ்சிய காலம் என்றென்றும் உவகைத்தேன்
விஞ்சிய வரங்கள் வாய்த்த நறுந்தேன்
கொஞ்சம் கவித்தேன் குழைத்தேன்
மிஞ்சும் மகிழ்வோடு வாழ கரங்களைக் குவித்தேன்.


                                                  --    செல்வபாய்


Comments

Popular Posts