பிறந்தநாள் வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்து
கீழ் வானம் சிவக்க
சாளரம் மெல்லத் திறக்க
சாய்ந்தாடு மரக்கிளை ஒதுங்க
செங்கதிரோன் ஞானம் டீச்சர் வீட்டில்
அத்துமீறல் நடத்த
செவிமடலைச் செந்தமிழ்
சொற்கள் தழுவி நடமாட
தங்க மகள் பிறந்தநாள்
தராணியோடு பாவணி சூட்டி
மகிழ்வோம் வாரீரென
பட்சியொன்று காதோரம் கவிபாட
சில்லென்று முகம் சிலிர்க்க
செவ்விதழ் மெல்லத் திறக்க
கண்கள் இதழுக்குத் தடையிட்டு
கவின்மொழி பேசி நிற்க
சுற்றம் சுற்றி நின்று
வாழ்த்துரைக்க
விஞ்சும் மதி யுண்டு
மிஞ்சும் மகிழ் வுண்டு
கொஞ்சும் நலம் கொண்டு
நெஞ்சம் விழைவன கண்டு
வாழ்வீரென யானும்
வாழ்துரைத்து மகிழ்கிறேன்
வாழ்க பல்லாண்டு
பல்லாண்டு
பல்லாயிரம் ஆண்டு
எம் உள்ளங்களை ஆண்டு!
Comments
Post a Comment